ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவை

Published On 2021-06-03 14:45 IST   |   Update On 2021-06-03 14:45:00 IST
கொரோனா தொற்று பரவலால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
கொரோனா தொற்று பரவலால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. அதன் ஒரு பகுதியாக இந்த மாதத்தில் (ஜூன்) தினமும் ரூ.300 தரிசன டிக்கெட் வழங்குவது 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

வி.ஐ.பி. பிரேக் தரிசனம், சுபதம் வழியாக செல்லும் சிறப்பு ஒதுக்கீடு தரிசன பக்தர்கள், உற்சவர் சேவை, ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கும் பக்தா்கள் ஆகியவற்றில் தினமும் 7 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நேற்று முன்தினம் 7 ஆயிரம் பக்தா்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரவு 9 மணியளவில் மூலவருக்கு ஏகாந்த சேவை முடிந்ததும் கோவிலின் நடை சாத்தப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், கொரோனா ஊரடங்கின்போது இரவு 8.30 மணியளவில் ஏகாந்த சேவை நடந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட தகவலை கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News