ஆன்மிகம்
உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி

திருவானைக்காவல் கோவிலில் 6-ம் நாள் வசந்த உற்சவம் விழா

Published On 2021-05-24 09:30 IST   |   Update On 2021-05-24 09:30:00 IST
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் -அகிலாண்டேஸ்வரி கோவிலில் நடைபெற்றுவரும் வசந்த உற்சவத்தின் 6-ம் நாளில் உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி ஆகியோர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர்.
பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் வசந்த உற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளன. கோவிலின் உள்ளேயே பக்தர்கள் இன்றி விழா நடந்த அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் வசந்த உற்சவத்தின் 6-ம் நாளான நேற்று உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி ஆகியோர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Similar News