ஆன்மிகம்
விருபாட்சீஸ்வரர் கோவில்

ஆத்ம பலத்தை அதிகரிக்கும் கோவில்

Published On 2021-05-22 13:16 IST   |   Update On 2021-05-22 13:16:00 IST
உலக உயிர்கள் அனைத்திற்கும் ஜீவசக்தியை அளிக்கும் வல்லமை கொண்டவர்களாக இத்தல இறைவனும், இறைவியும் திகழ்கிறார்கள்.
மயிலாப்பூர் சப்த சிவாலயங்களில் 4-வதாக வழிபட வேண்டிய ஆலயம் இது. இங்குள்ள இறைவன்- விருபாட்சீஸ்வரர், இறைவி- விசாலாட்சி அம்மன். இந்த ஆலயத்தில் அம்மன் சன்னிதி முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.

பைரவர், சூரியனார் சன்னிதிகள், அம்பாள் சன்னிதி அருகிலேயே அமைந்துள்ளன. இந்த ஆலயத்திற்கு சுந்தரமூர்த்தி நாயனார் வந்தபோது, அவருக்கு நடராஜர் தரிசனத்தை இறைவனை காட்டியருளி இருக்கிறார்.

உலக உயிர்கள் அனைத்திற்கும் ஜீவசக்தியை அளிக்கும் வல்லமை கொண்டவர்களாக இத்தல இறைவனும், இறைவியும் திகழ்கிறார்கள். இந்தக் கோவிலில் வழிபாடு செய்தால், ஆத்ம பலம் அதிகரிக்கும்.

Similar News