ஆன்மிகம்
சிவன்

சிவபெருமானின் பஞ்ச ஆரண்ய தலங்கள்

Published On 2021-05-21 14:39 IST   |   Update On 2021-05-21 14:39:00 IST
பஞ்ச ஆரண்ய தலங்கள் என்பவை ஒரு நாளின் காலை முதல் நள்ளிரவு வரை ஐந்து வேளை நடைபெறும் வழிபாட்டுமுறையில் கலந்து கொண்டு தரிசனம் பெறும்வகையில் அமைந்த ஐந்து சிவ தலங்களாகும்.

பஞ்ச ஆரண்ய தலங்கள் என்பவை ஒரு நாளின் காலை முதல் நள்ளிரவு வரை ஐந்து வேளை நடைபெறும் வழிபாட்டுமுறையில் கலந்து கொண்டு தரிசனம் பெறும்வகையில் அமைந்த ஐந்து சிவ தலங்களாகும். ஒரே நாளில் ஒவ்வொரு வேளை வழிபாட்டின்போதும் பஞ்ச ஆரண்ய தலங்களை தரிசிப்பதால் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி மறுபிறவி இல்லாத நிலையை அடையலாம்.

ஆரண்யம் என்றால் காடு எனப் பொருள்படும். பஞ்ச ஆரண்ய தலங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகைக் காடு அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இத்திருத்தலங்களில் விடியற்காலை, காலை, உச்சிவேளை, மாலை, அர்த்தசாமம் என ஐந்து முறை வழிபாடு நடத்தப்படுகிறது.

தஞ்சைக்கு அருகில் அமைந்துள்ள பஞ்ச ஆரண்ய தலங்கள் முறையே

1. திருகருக்காவூர் – விடியற்காலை

2. அவளிவநல்லூர் – காலை

3. அரதைபெரும்பாழி – உச்சிவேளை

4. ஆலங்குடி – மாலை

5. திருக்கொள்ளம்புதூர் – அர்த்தசாமம் ஆகியவை ஆகும்.

திருஞானசம்பந்தர் தனது திருதலப் பயணத்தின்போது பஞ்ச ஆரண்ய தலங்களை முறைப்படி வழிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பஞ்சஆரண்ய தலங்கள் யாவும் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளன.

Similar News