ஆன்மிகம்
திருப்பதி கோவில் தரிசனத்திற்கு ஜூன் மாதத்திற்கான 300 ரூபாய் டிக்கெட் இன்று வெளியீடு
திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத்திற்கு ஜூன் மாதத்திற்கான 300 ரூபாய் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது. பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்வதற்காக 300 ரூபாய் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அடுத்த மாதம் (ஜூன்) தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் டிக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
ஒரு நாளைக்கு 5 ஆயிரம் என்ற விகிதத்தில் டிக்கெட் வழங்கப்படுகிறது. பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாளைக்கு 5 ஆயிரம் என்ற விகிதத்தில் டிக்கெட் வழங்கப்படுகிறது. பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.