ஆன்மிகம்
துலாபார காணிக்கை

துலாபார காணிக்கை செய்வது ஏன்?

Published On 2021-05-20 13:43 IST   |   Update On 2021-05-20 13:43:00 IST
பழனி மலைக்கோவிலில் நேர்த்திக்கடனாக சில பக்தர்கள் சர்க்கரை, அச்சுவெல்லம், வாழைப்பழத்தார், நெய், கற்கண்டு போன்றவற்றை துலாபார காணிக்கையாக வழங்குவதை பார்க்க முடிகின்றது.
பழனி மலைக்கோவிலில் நேர்த்திக்கடனாக சில பக்தர்கள் சர்க்கரை, அச்சுவெல்லம், வாழைப்பழத்தார், நெய், கற்கண்டு போன்றவற்றை துலாபார காணிக்கையாக வழங்குவதை பார்க்க முடிகின்றது. அதேபோல் நம்பிக்கை தொடர்பான காணிக்கைகளாக தங்கம், வெள்ளி பொருட்கள், தாலி முதலியவை பக்தர்களால் செலுத்தப்பட்டு வருகின்றது.

மேலும் பக்தர்கள் பழனியாண்டவர் மீது வைத்துள்ள பக்திக்கு தங்கள் சொத்துகளையும் காணிக்கையாக பக்தர்கள் அளித்துள்ளனர். அந்த வகையில் பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு காணிக்கைகளாக நிலங்கள், மண்டபங்களை காணிக்கையாக செலுத்தியுள்ளதை அறிய முடிகிறது. கோவிலுக்கும், சமூகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை காணிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

Similar News