ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னாருடன் அருள்பாலித்த காட்சி.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவம்

Published On 2021-05-19 12:16 IST   |   Update On 2021-05-19 12:16:00 IST
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னாருடன் அருள்பாலித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகாசி மாத கோடை வசந்த உற்சவம் பக்தர்களின்றி துவங்கியது.

வருடம் தோறும் திருவேங்கடமுடையான் சன்னதியில் நடக்கும் இந்த வசந்த உற்சவம், தற்போது ஊரடங்கு காரணமாக ஆண்டாள் கோயில் வளாகத்திற்குள்ளேயே நடக்கிறது. இதனை முன்னிட்டு வெள்ளிக்குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சந்தன காப்பு மற்றும் வெண்பட்டு சாற்றபட்டு, மலர்சட்டை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

கோயில் பட்டர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் செய்திருந்தனர். 10 நாட்கள் நடக்கும் வசந்த உற்சவம் மே 26 அன்று நிறைவடைகிறது.

Similar News