ஆன்மிகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வசந்தோற்சவம் 25-ந்தேதி தொடங்குகிறது

Published On 2021-05-11 06:44 GMT   |   Update On 2021-05-11 07:41 GMT
கொரோனா பரவலால் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதியின்றி வருடாந்திர வசந்தோற்சவம் வருகிற 25-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை 3 நாட்கள் ஏகாந்தமாக நடக்கிறது.
திருமலை :

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் வருகிற 25-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. 24-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது. கொரோனா பரவலால் வசந்தோற்சவம் கோவில் உள்ளே பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது. 26-ந்தேதி தங்க ரதத்துக்கு பதிலாக திருச்சி உற்சவம் நடத்தப்படும்.

3 நாட்களில் மதியம் 2.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை கோவிலில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை கோவில் வளாகம் உள்ளே சாமி ஊர்வலம் நடக்கிறது. இதனால் 24-ந்தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்படுகிறது. 25-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை 3 நாட்களுக்கு கல்யாண உற்சவம் மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நடப்பதை முன்னிட்டு 18-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. 18-ந்தேதி அதிகாைல தாயாரை துயிலெழுப்பி சுப்ரபாத சேவை நடக்கிறது. காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை கோவில் ஆல்வார் திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

அப்போது கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, தூண்கள் மற்றும் பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் பித்தளை, தாமிர பொருட்கள் அனைத்தும் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்படுகிறது.

இதையடுத்து நாமகொம்பு, ஸ்ரீ சூரணம், கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், பச்ைச கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிகட்டை ஆகிய சுகந்த பொருட்களுடன் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது. அதன் பின்னர் கோவிலில் பக்தர்கள் காலை 10.30 மணியில் இருந்து பத்மாவதி தாயாரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தால் 18-ந்தேதி சாதாரண பக்தர்களுக்கான தரிசனம், காலை மற்றும் மாலை பிரேக் தரிசனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது, என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News