ஆன்மிகம்
பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் இன்றி நடந்தது

Published On 2021-05-10 10:17 IST   |   Update On 2021-05-10 10:17:00 IST
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் மலர்களால் சுவாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது சாமி சன்னதியில் சரவிளக்கு ஏற்றப்பட்டு ஒளிமயமாக காட்சியளித்தது. பின்னர் பிரதோஷ நாயனார் புறப்பாடு நடைபெற்றது

இதில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோபுர வாசலில் சில பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில் மற்றும் ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

இதில் ெகாரோனா காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Similar News