ஆன்மிகம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அணிவித்த பட்டு வஸ்திரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அணிவித்த பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கம் சென்றது

Published On 2021-05-08 08:37 GMT   |   Update On 2021-05-08 08:37 GMT
சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரம் அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட பட்டு வஸ்திரங்களை அணிந்துகொண்டு ஸ்ரீரெங்கநாதர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் பிறந்த தினம் சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரம் ஆகும். அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட பட்டு வஸ்திரங்களை அணிந்துகொண்டு ஸ்ரீரெங்கநாதர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அவரது பிறந்த நட்சத்திரமான ரேவதி நட்சத்திரம் வருகிறது. எனவே ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு அந்த பட்டு வஸ்திரங்களை கொண்டு செல்லும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று நடைபெற்றது.

இதற்காக பிரத்தியேக பட்டு வஸ்திரங்கள் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு, பின்னர் ஒரு கூடையில் அவற்றை வைத்து கொண்டு செல்லப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பக்தர்கள் யாரும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படவில்லை. கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பட்டு வஸ்திரங்களை நாளை நடைபெறும் கருடசேவை நிகழ்ச்சியின்போது ெரங்கநாதர் அணிந்துெகாண்டு பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் ஆண்டாளுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள திருப்பாவை பாடல்கள் அடங்கிய பட்டுப்புடவை ஒன்றை பக்தர் ஒருவர் நேற்று வழங்கினார். இந்த புடவையில் ஆண்டாளின் உருவம் தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த புடவையும் நேற்று ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News