ஆன்மிகம்
திருப்பதி கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் மூடப்பட்டுள்ள காட்சி.

திருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறைந்தது: கோதண்டராமர், வெங்கடேச பெருமாள் கோவில்களில் தரிசனம் ரத்து

Published On 2021-04-17 09:42 GMT   |   Update On 2021-04-17 09:42 GMT
கொரோனா பாதிப்பு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வருகை குறைந்தது. கோதண்டராமர், வெங்கடேச பெருமாள் கோவில்களில் இன்று காலை முதல் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்து வந்தனர். தற்போது ஆந்திராவில் கொரோனா அதிகரித்து வருகிறது.

இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 12-ந்தேதி முதல் இலவச சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் வருகை குறைந்தது.

நேற்று 22,664 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 16 ஆயிரத்து 677 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.65 கோடி உண்டியல் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருப்பதி சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், ஒண்டி மிட்டா கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் ஆகிய 2 கோவில்களில் இன்று காலை முதல் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவில் முன்பாக தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சாமிக்கு பூஜைகள் செய்ய கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நேற்று ஒரே நாளில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 1024 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது 2 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை 98 ஆயிரத்து 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்து 695 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 909 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 6,428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News