ஆன்மிகம்
ருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில்

திருமுருகநாத சாமி, சுக்ரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு

Published On 2021-04-17 11:11 IST   |   Update On 2021-04-17 11:11:00 IST
கொரோனா வேகமாக பரவி வருவதால் திருமுருகநாத சாமி, சுக்ரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் திருமுருகநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் தொல்லியல் துறைக்கு சொந்தமான சுற்றுலா தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி திருமுருகநாதசாமி கோவிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகமவிதிகளின் படி கோவிலில் பூஜைகள் தொடர்ந்து நடக்கும் என்று கோவிலின் முன்பு தொல்லியல் துறை மூலமாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதுபோல் ஊத்துக்குளி ரோடு எஸ்.பெரியபாளையத்தில் உள்ள சுக்ரீஸ்வரர் கோவிலும் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கும் பக்தர்கள், பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News