ஆன்மிகம்
அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக விழா

அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக விழா

Published On 2021-04-16 03:57 GMT   |   Update On 2021-04-16 03:57 GMT
அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவிலில் விபூதி அலங்காரத்தில் முருகன் வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதையடுத்து மகாதீபாராதனை நடந்தது.
கோவை சின்ன தடாகம் அருகே மலை மீது அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதையடுத்து தினந்தோறும் மண்டல பூஜைகள் நடை பெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று மண்டலாபிஷேக விழா கணபதி யாகத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 108 சங்குகளால் முருகனின் வேல் போல அலங்கரிக்கப்பட்டு சங்கு பூஜை நடைபெற்றது. மதியம் 12.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைக்கப்பட்ட கலசத்தை ஏந்தி கோவிலை சுற்றி வந்தனர். பின்னர் கலசத்தில் உள்ள தீர்த்தம் மூலம் மூலவர் சுப்ரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து விபூதி அலங்காரத்தில் முருகன் வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதையடுத்து மகாதீபாராதனை நடந்தது. முன்னதாக கோவில் முன்புறம் புதிதாக கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News