ஆன்மிகம்
மாதேஸ்வரன் மலை கோவில்

மாதேஸ்வரன் மலை கோவிலில் மகா தேரோட்டம் ரத்து

Published On 2021-04-12 09:30 IST   |   Update On 2021-04-12 09:30:00 IST
கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் உள்ள மலை மாதேஸ்வரன் கோவிலில் வருகிற 13-ந் தேதி நடைபெற இருந்த மகா தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் உள்ள மலை மாதேஸ்வரன் கோவிலில் ஆண்டுதோறும் யுகாதி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் யுகாதி திருவிழாவில் பங்கேற்க தமிழக பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது.

இந்த திருவிழாவில் மாதேஸ்வரன் மலைப்பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகள் மட்டுமே கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே வருகிற 13-ந் தேதி நடைபெற இருந்த மகா தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் ரத்து செய்யப்பட்டதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News