ஆன்மிகம்
காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதையும், பக்தர்கள் கூட்டத்தையும் படத்தில் காணலாம்.

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-02-23 06:19 GMT   |   Update On 2021-02-23 06:19 GMT
பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகமும், அதை தொடர்ந்து பரிவார கோபுரங்கள் கும்பாபிஷேகம், அதை தொடர்ந்து காமாட்சியம்மனுக்கு மகாகும்பாபிஷேகமும் நடைபெற்றது.
பொள்ளாச்சி பாலமாணிக்கம் வீதியில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 19-ந் தேதி மங்கள இசை, கணபதி ஹோமம் மற்றும் விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது.

இதை தொடர்ந்து 20-ந் தேதி காலை 9 மணிக்கு பஞ்சகவ்யபூஜை, திசா ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு 2-ம் காலயாக பூஜை, 11 மணிக்கு கோபுரகலசங்கள் பிரதிஷ்டை, மாலை 6 மணிக்கு 3-ம் கால யாகபூஜை நடைபெற்றது.

இதை தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு தீபாராதனை, உபாசார பூஜை, 9 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் பூஜை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு 4-ம் கால யாக பூஜை, காலை 8.30 மணிக்கு யாத்ராதானம், கலசங்கள் புறப்படுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காலை 9 மணிக்கு காமாட்சியம்மன் கோபுர மகா கும்பாபிஷேகமும், அதை தொடர்ந்து பரிவார கோபுரங்கள் கும்பாபிஷேகம், அதை தொடர்ந்து காமாட்சியம்மனுக்கு மகாகும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அக்னீஸ் முகுந்தன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு அன்னதானம், பகல் 11 மணிக்கு மகா அபிஷேகம், 12 மணிக்கு தசதரிசனம் கோமாதாபூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், அம்மன் திருவீதி உலா மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

Similar News