ஆன்மிகம்
சிவலிங்கம்

பாதரசத்தால் உருவாக்கப்பட்ட சிவலிங்கம்

Published On 2021-02-21 09:00 IST   |   Update On 2021-02-20 14:49:00 IST
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சித்தநாத் ஆசிரமம் உள்ளது. இங்குள்ள மிகப்பெரிய சிவலிங்கத்தில் என்ன அதிசயம் என்றால், இது பாதரசத்தால் உருவாக்கப்பட்ட சிவலிங்கமாகும்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சித்தநாத் ஆசிரமம் உள்ளது. இங்கு மிகப்பெரிய சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கத்தில் என்ன அதிசயம் என்றால், இது பாதரசத்தால் உருவாக்கப்பட்ட சிவலிங்கமாகும்.

பாதரசத்தை சுத்தப்படுத்தி கட்டுவது என்பது மிகப்பெரிய விஷயம். அது பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்களுக்கு மட்டுமே கைவந்த கலை என்று சொல்லப்படுகிறது. அப்படி ஒரு சித்தரால் வடிவமைக்கப்பட்டது,

இந்த சிவலிங்கம் என்று சொல்கிறார்கள். சித்த மார்க்கத்தில் செல்பவர்கள், இந்த ஆசிரமத்திற்குச் சென்று பாதரச லிங்கத்தை தரிசிக்கலாம். இதன் அருகாமையே நமக்கு பல நல்ல பலன்களைத் தருமாம்.

Similar News