ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் கோவில்

திருப்பரங்குன்றம் கோவில் தெப்பத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2021-01-15 13:35 IST   |   Update On 2021-01-15 13:35:00 IST
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்ப திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்ப திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தெப்ப திருவிழாவையொட்டி இன்று முதல் 24-ந் தேதி வரை காலை, மாலையிலுமாக கோவிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தில் மட்டுமே சுவாமி எழுந்தருளுதல் நடைபெறும். 

சாமி புறப்பாட்டில் தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதே சமயம் கோவிலுக்குள் கருவறையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

Similar News