ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையானை வழிபட பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வினியோகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் இன்று (திங்கட்கிழமை) சாமி தரிசனம் செய்ய, ஒருநாள் முன்கூட்டியே அதாவது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இலவச தரிசன டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.

இலவச தரிசன டோக்கன் திருப்பதி அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் விடுதியில் வினியோகம் செய்யப்படுகிறது. பக்தர்கள் முகக் கவசம் அணிந்து வந்தும், வரிசையில் காத்திருக்கும்போது சமூக விலகலை கடைப்பிடித்தும் இலவச தரிசன டோக்கனை பெற்று, இன்று (திங்கட்கிழமை) சாமி தரிசனம் செய்யலாம், என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.