ஆன்மிகம்

தமிழகத்தில் மூகாம்பிகை வீற்றிருக்கும் ஒரே ஆலயம்

Published On 2019-04-02 15:34 IST   |   Update On 2019-04-02 15:34:00 IST
கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் கோயிலில் உள்ள மூகாம்பிகையைப் போலவே திருவிடைமரூதூர் வீற்றிருக்கும் மூகாம்பிகையும் சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் கோயிலில் உள்ள மூகாம்பிகையைப் போலவே திருவிடைமரூதூர் வீற்றிருக்கும் மூகாம்பிகையும் சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள்.

இந்தியாவிலேயே கொல்லூரிலும், திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை சன்னதி உள்ளது. வேறு எங்கும் இல்லை. தனி சன்னதி இங்கு மட்டுமே. இக்கோயிலில் அம்பாள் சன்னதிக்குத் தெற்குபக்கம் மூகாம்பிகை சன்னதி உள்ளது. இக்கோயிலின் கர்ப்பகிரகம் வட இந்திய கோயிற் கோபுர அமைப்பில் (பாபா கோவில் போல) அமைந்து விளங்குகிறது. இந்த சன்னதியில் மிகவும் சக்தி வாய்ந்த மகா மேரு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மூகாசுரனை வதம் செய்த மூகாம்பிகை, தோஷம் நீங்க இங்கு வந்து சிவனை வழிபட்டாள். சிவன் விமோசனம் அளித்ததோடு, திருமணம் செய்து கொண்டார். வைகாசி உத்திரத்தன்று இத்திருமணம் நடக்கும். இதற்காக மூகாம்பிகா 3 நாட்கள் தவம் இருப்பாள். அதற்காக அந்த சன்னதி அருகில் தனி மண்டபம் உள்ளது.

Similar News