ஆன்மிகம்

புராண கதாபாத்திரங்கள்

Published On 2019-04-02 14:21 IST   |   Update On 2019-04-02 14:21:00 IST
புராண கதைகளில் வரும் சில முக்கியமான கதாபாத்திரங்களை பற்றியும், அதன் வழிபாடுகளை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ராம சேது

சீதையை கடத்திச் சென்ற ராவணன், அவளை இலங்கையில் சிறைவைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மனைவியை மீட்பதற்காக ராமன் இலங்கைச் செல்ல வேண்டிய திருந்தது. கடலுக்கு நடுவில் இருக்கும் அந்த தீவுக்குச் செல்ல வழியில்லை. அதனால் கடலில் பாலம் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. தனக்கு கிடைத்த சாபத்தையே வரமாக பயன் படுத்தி, விஸ்வகர்மாவின் மகன் நளன் கடலுக்குள் கற்களைக் கொண்டு ஒரு பாலத்தை அமைத்தான். அதுவே ‘ராம சேது’ என்று அழைக்கப்படுகிறது. இதையடுத்து அந்தப் பாலத்தின் வழியாக ராமனும், வானர வீரர்களும் சீதையை மீட்பதற்காக இலங்கைச் சென்றனர்.

ரோகிணி

கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் இரண்டு மனைவி களுள் ஒருவர்தான் இந்த ரோகிணி. வசுதேவரின் இரண் டாவது மனைவி தேவகி ஏழாவது முறையாக கர்ப்பமாகி யிருந்தாள். அப்பொழுது கடவுள் மாயா கருவாக ரோகிணியின் வயிற்றில் உருமாறினார், அதுதான் பலராமன்.

ருக்மணி

கிருஷ்ணரின் மனைவி ருக்மணி.முன்னதாக ருக்மணிக்கும், சிசுபாலன் என்ற மன்னனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ருக்மணியோ கிருஷ்ணரை காதலித்தாள். திருமணத்தன்று கிருஷ்ணர் வந்து ருக்மணியை அவரது ரதத்தில் தூக்கிச் சென்றார். ருக்மணியின் அண்ணன் ருக்மியும் சிசுபாலனும் கிருஷ்ணரை பின் தொடர்ந்து வந்து போர் தொடுத்தனர். கிருஷ்ணர் அவர்களை வென்று ருக்மணியை கரம் பிடித்தார். கிருஷ்ணர் - ருக்மணி திருமணம் துவாரகையில் கோலாகலமாக நடந்தேறியது.

Similar News