ஆன்மிகம்

அம்பத்தூர் ஒரகடம் அய்யா வைகுண்டர் கோவிலில் அவதார தின விழா

Published On 2019-03-02 10:15 IST   |   Update On 2019-03-02 10:15:00 IST
அம்பத்தூர் ஒரகடத்தில் உள்ள அய்யா வைகுண்டர் கோவிலில் 187-வது அவதார தின விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது.
அம்பத்தூர் ஒரகடத்தில் உள்ள அய்யா வைகுண்டர் கோவிலில் 187-வது அவதார தின விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு வில்லிவாக்கம் டி.கே.ஏ. திருமண மண்டபத்தில் இருந்து அய்யா அவதார தின ஊர்வலம் அன்று காலை தொடங்குகிறது.

அப்போது அகிலத்திரட்டு அம்மானை என்ற ஆகமத்தை தொட்டில் வாகனத்தில் வைத்து, மேள தாளத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக பாடி, அம்பத்தூர் எஸ்டேட், ஒரகடம் வழியாக அய்யா வைகுண்டர் கோவிலை வந்தடைகிறார்கள்.

அதைத்தொடர்ந்து அங்கு மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்புடன் பணி விடை, இரவு 7 மணிக்கு உகப்படிப்புடன் பணிவிடை, இரவு 7.30 மணிக்கு அய்யா சிவசூரிய குடை வாகனத்தில் பதிவலம் வருதல் ஆகியவை நடக்கிறது.

Similar News