ஆன்மிகம்
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் மாசி மகத்திருவிழாவில் 25 அடி நீள அலகு குத்தி வந்த பக்தரை படத்தில் காணலாம்.

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மாசி மகத் திருவிழா

Published On 2019-02-20 04:22 GMT   |   Update On 2019-02-20 04:22 GMT
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மாசி மகத் திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குடவறை கோவிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மாசி மகத் திருவிழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல், காலசந்தி பூஜை நடந்தது.

விழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் நேற்று முன்தினம் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள மண்டபங்களில் தங்கியிருந்து வழிபட்டனர். காலையில் மண்டபங்களில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பல்வேறு அடி நீள அலகு குத்தியும், கிரிப்பிரகாரம் வழியாக கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.

மதியம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூஜை நடந்தது. இரவில் கழுகாசலமூர்த்தி மயில் வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News