ஆன்மிகம்

சீதையை கடத்துவதற்காக மாரீசனை பயன்படுத்திய ராவணன்

Published On 2019-02-08 06:19 GMT   |   Update On 2019-02-08 06:19 GMT
ராவணனுக்கு மாமன் முறை கொண்டவன், மாரீசன். தன்னிடம் இருந்த மாரீசனை, சீதையை கடத்துவதற்காக ராவணன் பயன்படுத்தினான்.
ராவணனுக்கு மாமன் முறை கொண்டவன், மாரீசன். இவன் தாடகை என்ற அரக்கியின் மகன் ஆவான். ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட அசுரன். மாரீசனும் அவனது சகோதரன் சுப்பாவும் வனத்தில் இருந்த முனிவர்களிடம் இருந்து போர்க் கலையையும், மாய மந்திரங்களையும் கற்றறிந்தனர்.

ஒரு முறை ராமன் வைத்திருந்த வில்லுடைய நாணின் ஓசையைக் கேட்டு மிரண்ட மாரீசன் பல அடி தூரம் சென்று விழுந்தான். தன்னிடம் இருந்த மாரீசனை, சீதையை கடத்துவதற்காக ராவணன் பயன்படுத்தினான். அதன்படி பொன் மான் உருவம் கொண்டு, சீதையின் முன் சென்றான்.

அந்த மாய மானின் அழகில் மயங்கிய சீதை, அதைப் பிடித்து தரும்படி ராமனிடம் கேட்டாள். அவளது விருப்பத்தை நிறைவேற்ற சீதைக்கு காவலாக லட்சுமணனை நிறுத்தி விட்டு சென்றார் ராமன். தப்பி ஓடிய மானை நோக்கி ராமன் அம்பு வீசினார். அதில் மான் அடிப்பட்டு விழுந்தது.

அது இறக்கும் தருவாயில் ‘லட்சுமணா..’ என்றது. அப்போது தான் ராமனுக்கு அது மாயை என்பது புரிந்தது. அதற்குள் சீதை அச்சம் அடைந்து லட்சுமணனை அனுப்பி வைத்தாள். அந்த நேரத்தில் தான் ராவணன், சீதையை இலங்கைக்கு தூக்கிச் சென்றான். சீதையை கடத்திச் செல்வதற்கு உதவியாக இருந்தவன் மாரீசன். 
Tags:    

Similar News