ஆன்மிகம்
திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேர் வெள்ளோட்டத்தில் தேரை, பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தபோது எடுத்தபடம்.

திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேர் வெள்ளோட்டம்

Published On 2018-07-12 06:22 GMT   |   Update On 2018-07-12 06:22 GMT
திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறில் ஐயாறப்பர் கோவில் உள்ளது. தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின்போது தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இதற்காக பயன்படுத்தப்படும் தேர் பழுதடைந்தது. இதையடுத்து ரூ.50 லட்சம் செலவில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டது.

இந்த தேரின் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், தேரை வடம்பிடித்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார்.

திருவையாறு கீழவீதி, மேல வீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி ஆகிய இடங்கள் வழியாக வலம் வந்த தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெத்தினசாமி, முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தேர் வெள்ளோட்டத்தையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர், பழனிமுத்து மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Tags:    

Similar News