ஆன்மிகம்
திருக்கல்யாண நிகழ்ச்சியில் காரைக்கால் அம்மையார், பரமதத்த செட்டியார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி

மாங்கனித் திருவிழாவில் காரைக்கால் அம்மையாருக்கு திருக்கல்யாணம்

Published On 2018-06-27 03:33 GMT   |   Update On 2018-06-27 03:33 GMT
மாங்கனித் திருவிழாவில் காரைக்கால் அம்மையாருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா நேற்று முன்தினம் இரவு மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.

விழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை 11 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக, தீர்த்தகரைக்கு அம்மையாரும், குதிரை வாகனத்தில் பரமதத்த செட்டியாரும் வந்தனர்.

விழாவில் அமைச்சர் கமலக்கண்ணன், அசனா எம்.எல்.ஏ., கலெக்டர் கேசவன், கோவில் நிர்வாக அதிகாரி, விக்ராந்த் ராஜா, அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் திரளான பக்தர்கள் திருக்கல்யாணத்தை தரிசித்தனர்.தொடர்ந்து, இரவு 10 மணிக்கு காரைக்கால் அம்மையாரும், பரமதத்த செட்டியாரும் முத்துச் சிவிகையில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள்.

திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக, இன்று (புதன்கிழமை) அதிகாலை 2.30 மணிக்கு பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகாஅபிஷேகம், தீபாராதனை, காலை 7 மணிக்கு பரமசிவன் பிச்சாண்டவர் கோலத்தில் வீதிஉலா நடக்கிறது. வீதிஉலாவின்போது மாங்கனிகளை பக்தர்கள் வாரி இறைத்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள்.

பின்னர் இரவு 7 மணிக்கு காரைக்கால் அம்மையார் பிச்சாண்டவருக்கு அமுது படைத்தல், இரவு 9 மணிக்கு சித்திவிநாயகர் கோவிலில் பரமதத்தருக்கு 2-வது திருமணம், நள்ளிரவு 11 மணிக்கு புனிதவதியார் புஷ்ப பல்லக்கு வீதிஉலா நடக்கிறது. இதனை தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) அதிகாலை, அம்மையாருக்கு இறைவன் காட்சி தருகிறார். 
Tags:    

Similar News