ஆன்மிகம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் 31-ந்தேதி பந்தல் கால்நாட்டு விழா

Published On 2018-01-29 13:38 IST   |   Update On 2018-01-29 13:38:00 IST
மண்டைக்காடு பகவதி அம்ம்ன கோவிலில் மாசித்திருவிழாவையொட்டி பந்தல் கால்நாட்டு விழா வருகிற 31-ந்தேதி நடைபெறுகிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

இக்கோவில் ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான மாசித்திருவிழா மார்ச்-4 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 13-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைகிறது.

இதற்கான பந்தல் கால்நாட்டுவிழா வருகிற 31-ந் தேதி(புதன்கிழமை) நடக்கிறது. விழாவில் அன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை, 8.30 மணிக்கு பந்தல் கால்நாட்டு விழாவும், மதியம் 1 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது.

மாலை சந்திரகிரகணம் நடைபெறுவதால், அப்போது நடத்தப்படும் பூஜைகள், பிற்பகலில் நடத்தப்பட்டு நடை சாத்தப்படுகிறது. பின்னர், மறுநாள் காலை வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். விழாவையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.

Similar News