ஆன்மிகம்

நீரில் மிதந்து கொண்டிருக்கும் விஷ்ணு சிலை

Published On 2017-08-31 14:35 IST   |   Update On 2017-08-31 14:35:00 IST
நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புத்தானிகந்தா கோவிலில் விஷ்ணு சிலை நீரில் மிதந்து கொண்டிருக்கிறது.
நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்தானிகந்தா கோவில். இந்த ஆலயத்தில் உள்ள விஷ்ணு சிலை, ஆதி சேஷன் மீது பள்ளிகொண்டிருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.

14 அடி உயரம் கொண்ட இந்த சிலை சுமார் 13 நூற்றாண்டுகளாக, நீரில் மிதந்து கொண்டிருக்கிறது என்பது தான் இந்த ஆலயத்தின் சிறப்பு. 7-ம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன், இந்த சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது.

இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும், இதற்கான அர்ச்சனைகளும், அபிஷேகங்களும் தினமும் நடந்த வண்ணமே இருக்கின்றன.

Similar News