ஆன்மிகம்

கற்கடேஸ்வரர் ஆலயத்தில் அபிஷேகத்தால் வெளியேறும் நண்டு

Published On 2017-07-06 08:18 GMT   |   Update On 2017-07-06 08:18 GMT
கற்கடேஸ்வரர் ஆலய சிவலிங்கத்தை நீராட்டினால், சிவலிங்கத்தில் இருந்து நண்டு வெளியில் வந்து காட்சி தரும் என்று வசிஷ்ட மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் திரு விடைமருதூர் தாலுகாவில் வேப்பத்தூர் என்ற ஊரின் அருகில் உள்ளது திருந்துதேவன்குடி. இங்குதான் கற்கடேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 42-வது தலமாக இது விளங்குகிறது. இந்த ஆலயத்தில் இரண்டு அம்பிகை சன்னிதிகள் இருக்கின்றன.

கோவில் கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மீது, இந்திரன் வாளால் வெட்டிய வடுவும், சிவலிங்கத்தில் நண்டு நுழைந்து வெளியேறியதற்கான துவாரமும் காணப்படுகின்றன. ஆடி அமாவாசையும், பூர நட்சத்திரமும் கூடிய நேரத்தில், 21 குடம் காராம் பசும்பாலைக் கொண்டு இங்கிருக்கும் சிவலிங்கத்தை நீராட்டினால், சிவலிங்கத்தில் இருந்து நண்டு வெளியில் வந்து காட்சி தரும் என்று வசிஷ்ட மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.

ஆணவத்தின் காரணமாக நண்டை வெட்ட முயன்ற இந்திரன், வாள் சிவலிங்கத்தின் மீது பட்டதும் பதறினான். அங்கு சிவபெருமான் தோன்றி, அவனுக்கு அறிவுரை கூறியதும் வருந்தி திருந்தினான். இதன் காரணமாகவே அந்த திருத்தலத்திற்கு ‘திருந்துதேவன்குடி’ என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.
Tags:    

Similar News