ஆன்மிகம்
திருக்கல்யாண உற்சவத்தில் சுவாமிகள் காட்சி அளித்ததை படத்தில் கணலாம்.

நடனபாதேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Published On 2017-07-06 09:04 IST   |   Update On 2017-07-06 09:04:00 IST
திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லிக்குப்பம் அருகே உள்ள திருக்கண்டேஸ்வரத்தில் நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் 13 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான பிரம்மோற்சவம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி நடன பாதேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வந்தது. இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற்று வந்தது.

விழாவில் நேற்று முன்தினம் மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி நடனபாதேஸ்வரர், அஷ்டதாலாம்பிகை சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் வருகிற 9-ந் தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, கோவில் குருக்கள் சேனாதிபதி, கணக்கர் சரவணன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Similar News