ஆன்மிகம்
ஐயப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

மேட்டுப்பாளையம் அருகே ஐயப்பசாமிக்கு புஷ்பாஞ்சலி

Published On 2017-01-09 13:07 IST   |   Update On 2017-01-09 13:07:00 IST
மேட்டுப்பாளையம் ஐயப்பன் பஜனை சமாஜத்தின் 56-வது ஆண்டு பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியின் 10-வது நாளான நேற்று காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மேட்டுப்பாளையம் காட்டூர் எஸ்.கே.சாமி லே அவுட்டில் உள்ள ஐயப்பன் பஜனை சமாஜத்தின் 56-வது ஆண்டு பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி கணபதி ஹோமம், சாஸ்தா ஹோமம், தன்வந்திரி ஹோமம், சண்டி ஹோமம், திருவிளக்கு பூஜை, லட்சார்ச்சனை ஆகியவை நடந்தன. நிகழ்ச்சியின் 10-வது நாளான நேற்று காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பகல் 12 மணிக்கு ஐயப்பசாமிக்கு வண்ண மலர்களால் புஷ்பாஞ்சலி, கனகாபிஷேகம், ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பசாமி ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News