ஆன்மிகம்

நிறம் மாறும் விநாயகர்

Published On 2016-11-15 14:12 IST   |   Update On 2016-11-15 14:12:00 IST
கேரளபுரம் அருகே உள்ள சிவன்கோவிலின் அரச மரத்தின் அடியில் நிறம் மாறும் விநாயகர் வீற்றிருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ளது கேரளபுரம் என்ற திருத்தலம். இங்குள்ள சிவன்கோவிலில் அரச மரத்தின் அடியில் மேற்கூரை ஏதும் இன்றி விநாயகர் வீற்றிருக்கிறார். இவரை ‘நிறம் மாறும் விநாயகர்’ என்று அழைக்கிறார்கள்.

இந்த விநாயகர் உத்தராயண காலம் என்று கூறப்படும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறமாகவும், தட்சிணாயன காலம் என்று கூறப்படும் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கறுப்பு நிறமாகவும் மாறுகிறார். விநாயகரின் நிற மாற்றத்திற்கு அவரது உருவம் சந்திர காந்தக் கல்லால் அமைந்துள்ளதே காரணம் என்று கூறப்படுகிறது.

Similar News