ஆன்மிகம்
பீமனால் விமோசனம் அடைந்த வியாக்ரபாதர்
பீமனால் விமோசனம் அடைந்த வியாக்ரபாதர் பற்றி கதையை கீழே விரிவாக பார்க்கலாம்.
மத்யந்தனர் என்ற முனிவருக்கு மகனாகப் பிறந்த மழன், தனது தந்தையிடமே வேதங்களைக் கற்றுக் கொண்டான். அவன் ஒரு நாள் தந்தையிடம், ‘மனிதனாகப் பிறந்தவர்கள் இறைவனை அடையத் தவம் செய்தால் மட்டும் போதுமா?’ என்று கேட்டான்.
அதற்கு அவர், ‘தவம் செய்தால் சொர்க்கம் மட்டுமே கிடைக்கும். சிவ வழிபாடு செய்பவர்கள்தான் மறுபிறவி இல்லாத உயர்ந்த நிலையை அடைவார்கள். நீ சிவனை வழிபட்டுச் சிறந்த நிலையைப் பெற முயற்சி செய்’ என்றார்.
அதன் பிறகு, மழன் சிவ வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டினான். அவனுடைய பக்தி மிகுந்த சிவ வழிபாட்டைக் கண்ட முனிவர்கள் பலரும், அவனை ‘மழமுனிவர்’ என்று அழைக்கத் தொடங்கினர். இதையடுத்து மழமுனிவர், பிற இடங்களுக்கும் சென்று சிவ வழிபாடு செய்வது என்று முடிவு செய்தார். அவருடைய வழிபாட்டுப் பயணத்தில், தில்லைவனம் எனும் பகுதிக்கு வந்து சேர்ந்தார்.
அந்தப் பகுதியில் உயரமாக வளர்ந்திருந்த மரங்களில் பூத்துக் கிடந்த பூக்கள், அவரை மிகவும் கவர்ந்தன. தான் வழிபட இருக்கும் சிவலிங்கத்தை, அந்த அழகிய பூக்களைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.
சிவ வழிபாட்டிற்காக பறிக்கும் பூக்கள், தேன் குடிக்க வரும் வண்டுகளால் எச்சில்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அதிகாலை நேரத்திலேயே, அந்த மரங்களில் ஏறி பூக்களைப் பறித்துக் கொண்டு வந்தார். மரம் ஏறுவதில் அனுபவமில்லாத அவருக்குக் கைகளிலும், கால்களிலும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டன. அந்தக் காயங்களிலிருந்து வழிந்த ரத்தத் துளிகள் அவர் பறித்து வந்த சில பூக்களில் ஒட்டிக் கொண்டிருந்தன. அது மட்டுமில்லாமல், சூரிய வெளிச்சமில்லாமல் இருட்டாக இருந்த அதிகாலை நேரத்தில் பூக்களைப் பறித்து வந்திருந்ததால், அவர் பறித்து வந்த பூக்களில் சில அழுகிய பூக்களும் இருந்தன.
இதனால் வருத்தமடைந்த அவர், எளிதில் மரம் ஏறுவதற்கு வசதியாகப் புலியின் கால்களும், இருட்டிலும் தெளிவாகக் காணும் நல்ல பார்வையும் வேண்டுமென்று நினைத்தார். அவர் இறைவன் சிவபெருமானை நினைத்துத் தனக்குப் புலியின் கால்களும், தெளிவான பார்வையும் தந்தருளும்படி வேண்டினார்.
சாபம் :
அவரின் வேண்டுதலைக் கேட்ட சிவபெருமான், அவருக்கு நேரில் காட்சியளித்து வேண்டிய வரத்தை வழங்கினார். அதன்பிறகு முனிவரின் கால்கள் புலிக்கால்களாக மாற்றமடைந்தன. கைகளும் புலியின் கால்களைப் போன்று மாறின. அவருக்கு இருட்டிலும் தெளிவாகக் காணும் பார்வையும் கிடைத்தது. புலியின் கால்களைக் கொண்டவர் என்பதால் அவர் ‘வியாக்ரபாத முனிவர்’ என்று அழைக்கப்பட்டார்.
தன்னுடைய வழிபாட்டை மேலும் சிறப்பாக செய்ய நினைத்த வியாக்ரபாத முனிவர், துர்வாச முனிவரிடம் சீடராகச் சேர்ந்தார். துர்வாச முனிவர், வியாக்ரபாதருக்கு சிவ வழிபாடு மட்டுமின்றி விஷ்ணு வழிபாடு, அம்பாள் வழிபாடு, பிரம்மன் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு இறை வழிபாடுகளையும், அதற்கான வழிபாட்டு முறைகளையும் கற்றுக் கொடுத்தார்.
ஒரு நாள் காலையில் துர்வாச முனிவர் இறைவழிபாடு செய்து கொண்டிருந்தார். அவருக்கு உதவுவதற்காக அங்கே சென்ற வியாக்ரபாதரின் கால் பட்டு, துர்வாசரின் கமண்டலம் கீழே சாய்ந்தது. கமண்டலத்திலிருந்து வெளியேறிய நீர்த்துளிகள், முனிவரின் உடல் மீது போய் விழுந்தன.
நீர்த்துளி பட்டு கண்விழித்த துர்வாசர், எதிரில் நின்ற வியாக்ரபாதரைப் பார்த்து, ‘உன் புலிக்கால்களால் கமண்டலத்தைத் தட்டி விட்டு, என் வழிபாட்டிற்கு இடையூறு செய்த நீ, இனி புலியாகவே மாறி காட்டில் அலைந்து துன்பப்படுவாய்’ என்று சாபமிட்டார்.
அதைக் கேட்டு வருத்தமடைந்த வியாக்ரபாதர், ‘முனிவரே, நான் தங்களுடைய வழிபாட்டிற்கு இடையூறு செய்ய வேண்டுமென்று எதையும் செய்யவில்லை. தங்கள் வழிபாட்டிற்கு உதவ வேண்டுமென்றுதான் இங்கு வந்தேன். அப்போது, என்னையும் அறியாமல், இந்தத் தவறு நடந்து விட்டது. நான் அறியாமல் செய்த இந்தத் தவறை மன்னித்து எனக்குச் சாப விமோசனம் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார்.
மனமிரங்கிய துர்வாசர், ‘நீ புலியாக மாறிக் காட்டில் இருந்து வரும் வேளையில், காட்டுக்கு வனவாசம் வரும் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமனால் தாக்கப்படுவாய். அப்போது, உனக்கு இந்தச் சாபத்திலிருந்து விமோசனம் கிடைக்கும்’ என்று சொன்னார்.
விமோசனம் :
புலியாக மாறி வியாக்ரபாதர் காட்டிற்குள் சென்றார். காட்டிற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்த அந்தப் புலியின் கண்களுக்கு, அங்கிருந்த விஷ்ணு சிலை ஒன்று கண்ணில் பட்டது. அந்தச் சிலையையே புலி சுற்றிச் சுற்றி வந்தது. பசிக்கு வேட்டையாடி உண்டுவிட்டு, மீண்டும் விஷ்ணு சிலை இருக்கும் இடத்திற்கே புலி வந்து படுத்துவிடும்.
இப்படியே பல ஆண்டுகள் போய்விட்டன. இந்த நிலையில், பஞ்சபாண்டவர்கள் வனவாசத்திற்காக திரவுபதியுடன் அந்தக் காட்டிற்கு வந்து சேர்ந்தனர். காட்டில் பாதுகாப்பான இடம் தேடியபோது, அவர்களுக்கு விஷ்ணு சிலை இருக்கும் இடம் தென்பட்டது. அப்போது புலி உணவு தேடி வெளியே சென்றிருந்தது.
விஷ்ணு சிலையை சுத்தம் செய்வதற்காக திரவுபதி அருகில் இருந்த நீர்நிலைக்குச் சென்று தண்ணீர் கொண்டுவரச் சென்றாள். அப்போது நீர்நிலையில் இருந்த புலி, திரவுபதியை நோக்கிப் பாய்ந்தது. பயந்து போன திரவுபதி ‘காப்பாற்றுகள்.. காப்பாற்றுகள்..’ என்று சத்தமிட்டபடி, பஞ்ச பாண்டவர்களை நோக்கி ஓடினாள்.
அவளது குரல் கேட்டு பாண்டவர்கள் ஓடிவந்தனர். திரவுபதியை புலி ஒன்று துரத்துவது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பாண்டவர்கள் 5 பேரைப் பார்த்ததும் சற்று பதுங்கிய புலி, பின்பு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்தது. அப்போது தன்னுடைய கதாயுதத்தால் புலியை தாக்கினான் பீமன்.
அடிபட்ட புலி பல அடி தள்ளிப்போய் விழுந்தது. விழும்போது ‘இறைவா என்னைக் காப்பாற்று’ என்று அலறியபடி விழுந்தது. விழுந்தவுடன் அந்தப் புலி, வியாக்ரபாத முனிவராக மாறியது.
அதைக் கண்ட பாண்டவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ‘முனிவரை தாக்கி விட்டோமே.. என்ன நடக்குமோ?’ என்று பீமன் அஞ்சினான். புலி உருவத்தில் இருந்த முனிவரை நோக்கி கரம் குவித்து, ‘என்னை மன்னித்து விடுங்கள். தாங்கள் யார் என்று தெரியாமல் இந்த தவறு நடந்து விட்டது’ என்று பணிந்தான்.
வியாக்ரபாதரோ, ‘பீமனே! துர்வாச முனிவரின் சாபத்தால் புலியாக மாறிவிட்டேன். உன்னால் என் சாபம் தீர்ந்தது’ என்று தன் கதையை சொல்லி முடித்தார். மேலும் பீமனுக்கு வரமும் அளித்தார். ‘உன்னுடைய வீரம் இன்னும் ஐந்து மடங்கு பெருகும்’ என்று அருளினார்.