ஆன்மிகம்

கண்டி கதிர்காம கந்தன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2016-11-15 10:42 IST   |   Update On 2016-11-15 10:42:00 IST
பேரம்பாக்கம் அருகே உளுந்தை கிராமத்தில் உள்ள கண்டி கதிர்காம கந்தன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
பேரம்பாக்கம் அருகே உளுந்தை கிராமத்தில் உள்ள கண்டி கதிர்காம கந்தன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம், 4 கால யாக சாலை பூஜைகள் நடந்தது.

பின்னர் யாக சாலையில் இருந்து புனிதநீர் கலசம் எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கும், அதைத்தொடர்ந்து மூலவருக்கும் கும்பாபிஷேகம், மகாஅபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News