ஆன்மிகம்

சிவபெருமானின் குரு ராவணன்

Published On 2016-04-25 14:19 IST   |   Update On 2016-04-25 14:19:00 IST
பொதுவாக நம் எல்லோருக்கும் குரு எப்படி அவசியமோ அதுபோல்தான் தெய்வத்துக்கும் குரு அவசியம் என்று சாஸ்திரம் சொல்கிறது.
பொதுவாக நம் எல்லோருக்கும் குரு எப்படி அவசியமோ அதுபோல்தான் தெய்வத்துக்கும் குரு அவசியம் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆனால் தெய்வத்துக்கு தேவை இல்லை, இருந்தாலும், தெய்வமே தனக்கு என்று சொன்னால் அந்த குருவின் பெருமையை நாம் புரிந்துகொள்ள சொல்லப்பட்டதாகும்.

ஒரு தடவை பார்வதியும் பரமேஸ்வரரும் கைலாயத்தில் தனியாக இருக்கும்போது பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, பார்வதி தேவி, சிவனை பார்த்து சொன்னார்கள். எல்லோருக்கும் அனைத்தையும் தான் தருகிறீர்கள். ஆனால் நமகென்று ஒரு ஏன் ஒரு வீடு கூட இல்லை என்றாள்.

சிவபெருமான் சரி என சொல்லி ஒரு அருமையான வீட்டை சிருஷ்டி செய்தார், பார்வதிக்காகவும் தனக்காகவும். எப்போதும் போல் வீடு கட்டிவிட்டால், கிரகபிரவேஷம் செய்யணுமே., அதற்காக, தனது வீட்டு ஐயரை கூப்பிடவேண்டும் அல்லவா. அதுபோல்தான் தனது ஐயரை கூப்பிட்டு செய்ய சொன்னார் இறைவன். அந்த ஐயர் யார் தெரியுமா, வேறு யாரும் இல்லை., நம்ம ராவணன்தான்.

ராவணன் வந்து கிரகபிரவேஷத்தை தடபுடலாக செய்தான். சிவனுக்கு ஆயிற்றே. ராவணனை மிஞ்சிய சிவபக்தன் மூன்று உலகிலும் இல்லையே.

காரியங்கள் முடிந்தன. இப்போது ஆசாரியரின் பூஜைக்காக, தக்ஷிணை கொடுக்கவேண்டும் அல்லவா. அதற்காக, ராவணனை சிவபெருமான் கேட்கிறார். உங்களுக்கு என்ன சன்மானம் வேண்டும் என்று. ராவணன், தாங்கள்தானே கொடுக்கவேண்டும் கொடுங்கள் என்றான். அதற்கு சிவபெருமான் உனக்கு என்ன வேண்டும் என்று கேளு என்று சொன்னவுடன், ராவணன் எதுகேட்டாலும் தருவீர்களா என்றான். சிவபெருமான் எதுவேண்டுமானாலும் கேள் என்றான்.

அப்படியானால், சிவபெருமானே, உங்கள் வீட்டு கிரகபிரவேஷ தட்சிணையாக, நீங்கள், இந்த வீட்டையே எனக்கு கொடுங்கள் என்றான். சிவனும் அப்படியே ஆகுக என்று கொடுத்துவிட்டார் தனது வீட்டை. அந்த வீடு எது தெரியுமா அன்பர்களே., அதுதான்
இலங்கை ஆகும். அதனால்தான் ராவணன் தனது இருப்பிடமாக இலங்கையை வைத்துக்கொண்டான்.

Similar News