ஆன்மிகம்

எளிமையான பிள்ளையார் வழிபாடு

Published On 2016-04-25 13:53 IST   |   Update On 2016-04-25 13:53:00 IST
பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன
பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம்.

புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம் (நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும். இவ்வாறாக விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம்.

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால், சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

சந்தனத்தில் பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

விபூதியில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் நோய்கள் தீரும்.

குங்குமத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும்.

வெண்ணெயில் பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்தால், கடன் தொல்லை அகழும்.

வெல்லத்தால் பிள்ளையார் பிடித்து வழிபட்டால், உடலில் ஏற்படும் கட்டிகள் கரையும்.

Similar News