ஆன்மிகம்
துபாயில் திருக்குர்ஆன் சர்வதேச போட்டிகள் இன்று தொடங்குகிறது
துபாயில் புனித ரமதான் மாதத்தில் வழக்கமாக நடைபெறும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருதின் 21-ஆம் ஆண்டு நிகழ்வுகள் இன்று (2-ம் தேதி) மாலை தொடங்குகிறது.
துபாயில் புனித ரமதான் மாதத்தில் வழக்கமாக நடைபெறும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருதின் 21-ஆம் ஆண்டு நிகழ்வுகள் இன்று (2-ம்தேதி) வெள்ளிக்கிழமை மாலை தொடங்குகிறது. ரமதான் மாதத்தின் ஏழாம் நாளில் தொடங்கி இருபதாம் நாள் வரை நடைபெறும் இந்தப் போட்டியில் சுமார் 103 நாடுகளில் இருந்து பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இவ்விழா ரமதான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நிகழ்கின்றது. கடந்த ஒரு வாரமாக, துபாய் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீ கட்டிடத்தில் உலகப் புகழ்பெற்ற அறிஞர்களின் சிறப்பு விரிவுரைகள் நடைபெற்றன. பிரபல இஸ்லாமிய அறிஞர் டாக்டர். ஒமர் அப்துல் காஃபி, ‘இறைவனின் அருள்’ என்ற தலைப்பில் ரமதான் முதல் நாள் உரை நிகழ்த்தினார்.
அரபி ஆங்கிலம் தவிர, தமிழ், மலையாளம், வங்காள மொழிகளிலும் சிறப்புரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பெண்களுக்காக மட்டும் எட்டு நாட்களுக்கு விரிவுரைகளும் துபாய் மகளிர் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் டாக்டர் முகம்மது இமாம், 'மிகுந்த கலக்கமடைந்த உலகில் மனிதனுக்கு இறுதி பாதுகாப்பான புகலிடம்’ என்ற தலைப்பில் விரிவுரையைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் அமீரகத்தின் துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துபாயின் ஆட்சியாளரான மாண்புமிகு ஷேக் முகமது பின் ராஷீத் அல் மக்தூம் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெறுகிறது. கலாச்சார மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான துபாய் ஆட்சியாளரின் ஆலோசகரும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது விழாவின் தலைவருமான மாண்புமிகு இப்ராஹிம் முஹம்மது பூமெல்ஹா ஒழுங்கமைப்புக் குழு அமைத்து இந்நிகழ்ச்சிகளைச் சாத்தியப்படுத்துகிறார்.
ஒழுங்குபடுத்தும் குழுவின் உறுப்பினர் மற்றும் ஊடகப் பிரிவின் தலைவர் அஹ்மத் அல் ஜஹித், அனைத்து விருது நிகழ்வுகளும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று கூறினார். "டு (Du) சந்தாதாரர்கள் இணைய நெறிமுறை (IPTV 20 மற்றும் 653) அல்லது du view இலவச பயன்பாட்டின், சேனல் 1 வழியாக எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம்" என்றும் அவர் தெரிவித்தார்.
குர்ஆனை மனனம் செய்து இப்போட்டியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு, இப்போட்டிக் குழுவினர் பல வகையான கேள்விகள் கேட்டு அதில் தேர்வாகி ஆரம்பச் சுற்றில் தகுதி பெற்றவர்களை மட்டுமே மேடையேற்றுவார்கள். குர்ஆன் மனனப் போட்டியின் முதல் பரிசு திர்ஹம் 200,000/- (இந்திய ரூபாய் முப்பத்தைந்து லட்சம்), இரண்டாம் பரிசு திர்ஹம் 150,000/- (இந்திய ரூபாய் இருபத்தி ஆறு லட்சம்) மற்றும் மூன்றாம் பரிசும் திர்ஹம் 150,000/-. இது தவிர நல்ல உச்சரிப்புடன் அழகான குரல்வளத்துக்கான பரிசுகளும் தனியாக வழங்கப்பட உள்ளன.
உலகத்திலேயே குர்ஆனுக்காக நடத்தப்படும் போட்டிகளில் துபாயில் நடத்தப்படும் இந்தச் சர்வதேசப் போட்டியே மிகப் பெரிய அளவில் நடைபெறும் போட்டி. இதில் வழங்கப்படும் பரிசு மிகவும் மேன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெஸிலா பானு.