ஆன்மிகம்
அருள்மிகு லோகநாத பெருமாள் திருக்கோவில்-திருக்கண்ணங்குடி

அருள்மிகு லோகநாத பெருமாள் திருக்கோவில்-திருக்கண்ணங்குடி

Published On 2021-05-07 09:06 GMT   |   Update On 2021-05-07 09:06 GMT
தமிழ்நாட்டிலுள்ள தமிழ்நாட்டிலுள்ள பஞ்சகிருஷ்ண தலங்களில் இத்தலமும் ஒன்று. தாயார் சன்னதியில் மூலவரும் உற்சவரும் ஒரே முக சாடையில் இருப்பது எங்கும் காணமுடியாத அதிசயம்.
இறைவன்: லோகநாத பெருமாள்
இறைவி: லோகநாயகி தாயார்
தீர்த்தம்:  சிரவண புஷ்கரணி தீர்த்தம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்

கோவிலின் சிறப்புகள்:

மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 18வது திருத்தலம். காயாமகிழ், உறங்காப்புளி, தேறா வழக்கு, உறா கிணறு திருக்கண்ணங்குடி என்பது பழமொழி. உறங்காப்புளியும் ஊறா கிணறும் இப்போது இல்லை. காய்ந்து பட்டு போகாத வரம் பெற்ற ஸ்தல விருக்ஷமான மகிழ மரம் கோவிலுக்கு பின்புறம் உள்ளது. தாயார் சன்னதியில் மூலவரும் உற்சவரும் ஒரே முக சாடையில் இருப்பது எங்கும் காணமுடியாத அதிசயம்.

கிருஷ்ண பக்தி நிறைந்த வசிஸ்டர் வெண்ணெய் மயமான கிருஷ்ணரை இளகாமல் விக்ரமாக வழிபட்டுவந்தார். பக்தியை மெய்ச்சிய கண்ணபிரான் குழந்தையாக கோபாலன் அவர் வழிபட்ட கிருஷ்ணனை உண்டுவி ட்டார். கிருஷ்ணனை வசிஸ்டர் விரட்ட மகிஷ மரத்தடியில் தவம் செய்து கொண்டு இருந்த ரிஷிகள் இருந்த பகுதிக்கு வந்தார் இதை ஞான திருஷ்டியால் உணர்ந்த ரிஷிகள் கண்ணனை பக்தியாகிய பாச கயிற்றால் கட்டிபோட்டனர்.

ரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். விரட்டி வந்த வசிஷ்டர் கண்ணனின் பாதத்தில்சரண் அடைந்தார். கண்ணன் கட்டுண்டு நின்றபடியால் கண்ணங்குடி ஆயிற்று. இங்கு திருநீரணி விழா நடைபெறுகிறது. இந்த விழாவின் போது பெருமாள் விபூதி அணிந்து மூன்றே முக்கால் நாழி மட்டும் காட்சி தருவார். பக்தகோடிகளும் விபூதி அணிந்து வருவார். சிவ வைஷ்ணவ ஒற்றுமை. உபரிசரவசு மன்னனுக்காக நடைபெறும் விழா இது.

பஞ்சகிருஷ்ண தலங்கள்:

தமிழ்நாட்டிலுள்ள தமிழ்நாட்டிலுள்ள பஞ்சகிருஷ்ண தலங்களில் இத்தலமும் ஒன்று. ஏனைய நான்கு பஞ்சகிருஷ்ண தலங்கள் கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகிய ஊர்களிலுள்ள பெருமாள் கோவில்கள் ஆகும்.

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் உள்ள கீழ்வேளூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை8.00  – 11.30  மற்றும் மாலை  5.00   – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு லோகநாத பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி, நாகப்பட்டினம் மாவட்டம் 611104.
Tags:    

Similar News