ஆன்மிகம்
ஆவுடையார் கோவில்

ஆதி கயிலாயம் ஆவுடையார் கோவில்- புதுக்கோட்டை

Published On 2020-04-22 12:34 IST   |   Update On 2020-04-22 12:34:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ஆவுடையார்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ஆவுடையார்கோவில். திருவாசகப் பாடல்கள் அனைத்திலும் இந்த ஊரானது திருப்பெருந் துறை என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது ஆவுடையார்கோவில் என்றே அழைக்கப்படுகிறது. இலக்கியங்களில் ஆதிகயிலாயம், குருந்தவனம், சிவபுரம், பராசந்திபுரம், பூலோக கயிலாயம் எனப் பல பெயர்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கோவில் அமைப்பு

இக்கோவில் ஊரின் நடுவில் தெற்கு நோக்கி அமைந் துள்ளது. கோவிலைச் சுற்றி தேரோடும் நான்கு வீதிகள் அழகுற அமைந்துள்ளன. கோவிலுக்குள் மூன்று பிரகாரங்கள் உள்ளன. கோவில் வாசலில் அமைந் துள்ள ராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டு விளங்குகிறது. இத்திருக் கோவில் யோகம் மற்றும் ஞான மார்க்கத்தார் போற்றும் சிறப்புடையது. இங்குள்ள இறைவன் அரூபமாக வைத்து பூஜிக்கப்படுகிறார். எனவே இக்கோவில் மற்ற சிவன் கோவில்களின் அமைப்புகள் மற்றும் சிறு தெய்வ வழிபாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு விளங்குகிறது.

மூலவர் ஆத்மநாதர்

தில்லையில் ஸ்ரீநடராஜர் ஆனந்த தாண்டவம் நிகழ்த்துவதற்கு முன்பு பதஞ்சலி முனிவர், புலிக்கால் முனிவர், மற்றும் பல முனிவர்கள் இந்த குருந்தவனத்தில் தவம் இயற்றும் போது, இறைவன் காட்சி தர அவர்கள் பேரானந்தமடைந்து இறைவனிடம் திருநடனக் காட்சியையும் வேண்டினார்கள். அதற்கு ஈசன், சிதம்பரத்திற்கு வந்து ஆனந்தத் திருநடனக் காட்சியை காணுங்கள் என்று அருளினார்.

அவ்வாறே முனிவர்கள் அனைவரும் தேவர்களுடன் சிதம்பரம் சென்று ஆண்டவனின் ஆனந்த திருநடனக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர் என்பது புராண வரலாறு. முனிவர்களுக்கு காட்சி தந்தவர் இக்கோவிலின் மூலவராகிய ஆத்மநாதர் ஆவார். ஆத்மாவுக்கு நாத ராய் விளங்குவதால் இவர் ஆத்மநாதர் எனப்படுகிறார்.
அனைத்து சிவன் கோவில்களிலும் உள்ள சிவலிங்கத் திருமேனி பாணம், சக்தி பீடம், பிரம்ம பீடம் என மூன்று பகுதிகளாக விளங்கும். ஆனால் இங்கு நடுவில் உள்ள சக்தி பீடம் பகுதி மட்டுமே உள்ளது. அதற்கு மேலே குவளை ஒன்று சாத்தியிருப்பார்கள். அதாவது சக்தி பீடத்தில் அறிவொளியாக ஆத்ம நாதர் விளங்குகிறார். அதாவது உருவம் இல்லாத அருவமாக இறைவன் விளங் குகிறார். சக்தி பிம்பம் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதால் சக்தியே பிரம்மத்தை வெளிப்படுத்துகிறது என்பது தத்துவம் ஆகும்.

அம்பிகை யோகாம்பிகை

அம்பிகை கோவில் கருவறையில் அம்பிகை அரூபமாக விளங்குவதால், உருவத்திருமேனி கிடையாது. ஒரு யோக பீடம் மட்டுமே காணப்படும். அம்பிகை யோகாம்பிகை எனவும் சிவ யோக நாயகி எனவும் போற் றப்படுகிறாள்.

மாணிக்கவாசகர்

தற்போது மக்கள், கோவிலுக்கு வழிபடச்செல்லும் போது, நேராக மூலஸ் தானதிற்குச் சென்று மூல வரை வழிபட்டு விட்டு பின்னர் முதல் பிரகாரம், இரண்டாவது பிரகாரம், மூன்றாவது பிராகாரம் என்று சுற்றி வருவது போல, நாமும் மூலவர் ஆத்மநாதரை வழிபட்டு விட்டு முதல் பிரகாரம் சுற்றி வந்தால் முதலில் நாம் வழிபடுவது மாணிக்கவாசகரின் உற்சவ மூர்த்தியாகும். அடுத்து நாம் காண்பது அம்பாள் யோகாம்பிகை கோவிலா கும். அம்பிகையின் பாதங் களை நாம் கருங்கல் பலகணி வழியாகத்தான் தெரிசிக்க வேண்டும்.

ஆத்மநாதரின் கருவறைக்கு நேர் பின்புறத்தில், நாலுகால் மண்டபத்தில், ஆத்மநாதர் யோகாசன மூர்த் தியாகவும், அவருக்கு எதிரில் மாணிக்கவாசகர் உபதேசம் பெறுவது போலவும், சிற்பங்கள் உள்ளன. இறைவன் குருந்தமரமாக விளங்குதல் முதல் சிறப்பாகும். பின்னர் வந்த மாணிக்கவாசகர், குருந்தவன முனிவர்கள் சொற்படி சக்தி பிம்பத்தையே அத்மநாதராக பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினார் என்கிறது வரலாறு.

அடுத்து முதல் பிரகாரத் தில் தொடர்ந்து சென்றால் திருவாசகக் கோவிலையும், நடராஜர் சந்நிதியையும், அதற்கு எதிரில் ஆத்மநாத கூபம் எனப்படும் தீர்த்தக் கிணற்றையும் காணலாம். இதற்கு சிவா தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. இக்கோவிலில் விநாயகர், முருகன், நடராஜர், மாணிக்க வாசகர் தவிர வேறு பரிவார மூர்த்திகள் கிடையாது. இரண்டாம் பிரகாரத்தில், தில்லை மண்டபம், பக்தி மண்டபம் முதலியான உள்ளன. தில்லை மண்டபமே நடன சபை என்பர். அடுத்து மூன்றாம் பிரகாரத்தில் ஆயி ரங்கால் மண்டபத்தில் பல தெய்வங்களின் சிற்பங்களை யும் குதிரை வீரர்களின் சிற் பங்களையும் காணலாம்.

அடுத்து மாணிக்கவாச கரின் மூலவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோ விலில் கருவறை, அர்த்த மண்டபம், பிரகாரம், விமானம் என தனிக்கோவில் போன்று அமைந்துள்ளது.  அடுத்து தொடர்ந்து சென்றால் , வெயிலுகந்த விநாயகர், அக்னி தீர்த்தம், எண்ணற்ற சிற்ப வேலைப்பாடுகள் உள்ள பெரிய பெரிய தூண்கள் ஆகிய வற்றைக் காணலாம்.

அடுத்து உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் தான் விழாக் காலங்களில் மாணிக்கவாச கர் எழுந்தருளி காட்சி கொடுக்கும் உயரமான மேடை அமைந்துள்ளது. அடுத்து தல விருட்சமான குறுந்த மரங்கள் இரண்டு உள்ளன. இவ்விருட்சங்களை வலம் வருவதற்கு ஏற்ப மேடை உள்ளது. அடுத்து வசந்த மண்டபம், பஞ்சாட்சர மண்டபம் ஆகியவற்றில் உள்ள சிற்பங்களைக் கண்டு மகிழலாம்.

நடைதிறப்பு : காலை 06.00 மணி முதல் 12.00 வரை, மாலை 04.00 மணி முதல் 09.00 வரை.

கோவில் அமைப்பு

கோவிலின் முன்புறம் திருவாவடுதுறை ஆதீனப் பெயர்ப் பலகையுள்ளது. எதிரில் சற்று உள்ளடங்கி, குளமொன்று உள்ளது. பயன்படுத்தும் நிலையில் இல்லை. சாலையில் இருந்து கோவிலுள் நுழையும் முன்பு மண்டபத்தின் மேற்புறம் குருந்தமர உபதேசக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் சுற்றிலும் கடைகள், மண்டபத்தின் விதானம் மரத்தாலாகியது.

பார்வையைச் சற்று உயர்த்தினால் மேற்புறக் கொடுங்கையின் மேலே ஒரு குரங்கும் (கீழ்நோக்கியவாறு), ஒரு உடும்பும் (மேல் நோக்கியவாறு) செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அலைபாயும் குரங்கு மனத்தை அடக்கி, ஆத்மநாதரின் திருவடியில் உடும்புப்பிடிபோல நிறுத்தி அவருடைய திருவடிகளைச் சிக்கென பிடித்து, உய்வுபெற வேண்டுமென்னும் எண்ணத்துடன் உள்ளே செல்க என்று நமக்கு உணர்த்துவது போல இது உள்ளது.

அடுத்துள்ளது மண்டபம் பெரியது ரகுநாத பூபால மண்டபம். அற்புதமான வேலைப்பாடுடைய பெரிய மூர்த்தங்கள், அகோர வீரபத்திரரும் ரண வீரபத்திரரும் உட்புறமாகத் திரும்பியவாறு தரிசனம் தருகின்றனர். மத்தியில் மேற்புறத்தில் விராட் சொரூபம் வண்ணத்தில், பாலவனம் ஜமீன்தாரர்களின் முன்னோர் களான வேதவனப் பண்டாரம், ஆறு முகப் பண்டாரம் ஆகியோர்களால் இம்மண்டபம் 330 ஆண்டுகட்கு முன்பு கட்டப்பட்டதாம்.

இடப்பால் சிவானந்த மாணிக்கவாசகர் சன்னிதி. வலமாகச் சுற்றி வரும்போது துவாரபாலகர்களையும் விநாயகரையும் தரிசிக்கிறோம். சுவரில் வண்ண ஓவியங்கள் மிகப்பழமையானவை. அழிந்த நிலையில் உள்ளன. அவற்றுள் ஒன்று. ‘அண்டரண்ட பட்சி’யின் வண்ண ஓவியம். இப்பறவை இரண்டு யானைகளை ஒரு சேரத் தூக்குமளவுக்கு வலிமையுடைய பறவையாகத் திகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. பாம்பன் சுவாமிகள் பாடியுள்ள வீரபத்திரச் சக்கரத்தின் வண்ண ஓவியம் உள்ளது. அட்டாங்கயோக வளர்ச்சி சிற்பங்கள் மேற்புறத்தில் உள்ளன. தூணில் கண்ணப்பர், கண்களை அப்பும் கோலம் முதலியவைகளையும் காணலாம். மண்டபத்தின் ஓரங்களில் அமைந்துள்ள கொடுங்கைகளின் அழகைக் கண்டு ஆனந்தம் பெறலாம்.

அடுத்துள்ளது ராஜகோபுரம் முன்பு ஐந்து நிலைகளாக இருந்ததை மாற்றி ஏழுநிலைகளாக்கித் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இதற்கான மகாகும்பாபிஷேகம் 27.6.1990 அன்று நடைபெற்றது. நெடிதுயர்ந்த ராஜகோபுரம், தொலையில் வரும்போதே வா என்று அழைக்கும் வான்கருணைச் சான்றான ஆத்மநாத ஸ்வருபத்தின் ஸ்தூல அடையாளம்.

ராஜகோபுரத்தின் வழியே உட்செல்லும் போது வாயிலின் இடப்பக்கத்தில்சுவரில் வள்ளல் பச்சையப்பர் இக்கோவிலுக்கு வைத்துள்ள தர்மத்தைப் பற்றிய சாசனக் கல்வெட்டு, பதிக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ள விவரம் வருமாறு:

ஆவுடையார்கோவிலில் காஞ்சிபுரம் பச்சையப்பர் முதலியாருடைய தர்மம் சகலருக்கும் பிரசித்தியாக தெரியும் பொருட்டு நிரந்தரமான ஞாபகத்தின் பொருட்டுச் செய்ய விளம்பரமாவது:

இறந்துபோன புண்ணிய புருஷராகிய பச்சையப்ப முதலியார் அவர்களாலே வைக்கப்பட்டிருக்கும் லட்சம் வராகனுக்கும் வரப்பட்ட வட்டிப் பணத்தினின்னும் ஆவுடையார் கோவிலில் சாயரசை கட்டளைத் தர்மமானது. கனம் பொருந்திய சுப்ரீம் கோர்ட் கவர்ன்மெண்டு அதிகாரிகளால் தர்ம விசாரனைக் கர்த்தர்களாக நியமிக்கப்பட்டுச் சென்னப்பட்டினத்திலிருக்கும் இந்து சபையாரவர்களுடைய உத்தரவின்படி சாலி வாகன சகாப்தம் 1764ஆம் வருஷத்து சரியான சுபகிருது வருடம் முதல் வருஷம் கறாளஉய 120 வராகன் செலவுள்ளதாக நடந்து வருகின்றது. மூலதனம் சுப்ரீம் கோர்ட்டு அதிகாரிகளுடைய உத்தரவின்படி சென்னப் பட்டணத்திலிருக்கும் ஜெனரல் திரேசரி என்னும் கவர்ன்மெண்டாருடைய பொக்கிஷத்தில் வைக்கபட்டிருக்கின்றது. தர்மம் கிரமமாக நடவாவிட்டால் தர்மத்தில் சிரத்தையுள்ளவர், சபையாரவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது.

உள்கோபுரத்தையும் தாண்டுகிறோம். அடுத்துள்ளது பஞ்சாட்ரச மண்டபம். உட்புகுமுன் நம் நினைவுக்கு ஒரு குறிப்பு: என்பது இக்கோவில் மரபு. விநாயகர், வீரபத்திரர், பட்சாடனர், ஊர்த்துவர் மூர்த்தங்களைத் தரிசித்தவாறே அம்பிகை சன்னிதியை அடைகிறோம்.

சுவாமியைப் போலவே அம்பாளும் தெற்கு நோக்கிய சன்னிதி, ஆத்மநாத சுவாமியைப் போலவே அம்பாளும் அருவம் தான். ஸ்ரீயோகாம்பாள் சன்னிதியில் திருமேனி இல்லை. சததளபத்ம பீடத்தில் 100 இதழ்கள் கொண்ட தாமரையாகிய பீடத்தில் யோகாம்பாளின் திருவடிகள் மட்டுமே தங்கத்தாலான யந்திர வடிவமாக உள்ளன.
முன்புறமுள்ள கல் ஜன்னல் வழியாகத்தான் தரிசிக்க வேண்டும். அதற்கேற்ப ஒளி பொருத்தப்பட்டுள் ளது. பூஜை செய்வோர் மட்டும் உள்ளே செல்வதற்குப் பக்கவாயில்உள்ளது.

யோக சொரூபியைத் தரிசித்து விட்டு வலமாக வரும்போது சுவரில் உள்ள சிவபுராணத்தையும் திருவாசகப் பாடற்பகுதிகளையும் படித்தவாறே வலம் வரலாம்.
அடுத்த தரிசனம் தல விசேடக் காட்சியான குருந்தமர உபதேசக் காட்சி. கல்லில் வடித்துள்ள குருந்த மரம் கீழே இறைவன் குரு வடிவில் அமர்ந்திருக்க எதிரில் மாணிக்கவாசகர் பவ்வியமாக இருந்து உபதேசம் பெறும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. ஆனித் திருமஞ்சன நாளிலும் மார்கழித் திருவாதிரையிலும் மாணிக்கவாசகருக்கு உபதேசித்த காட்சி உற்சவம் நடைபெறுகிறது.

அப்போது பூஜை செய்யும் நம்பியார் சிவ வேடமணிந்து, மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து உபதேச ஐதிகத்தை நடத்துவிக்கின்றார் “எந்தமராம் இவன் என்று என்னையும் ஆட்கொண்டருளும் என்ற திருவாசகத்தை நினை விருத்திக் தொழுது நகர்ந்தால், திருவாசகக் கோவிலை காணலாம். இங்கும் திருவாசக ஓலைச்சுவடியே இருப்பது விஷேசம்.

நடராசர் சன்னிதி மூலமூர்த்தமாக (கற்சிலையில்) அம்பலவாணர் ஆனந்த காட்சி. பாலசுப்பிரமணியரை வணங்கி, வலம் முடித்து, வாயிலைக் கடந்து உள்ளே செல்கிறோம். மேற்பகுதியில் ‘நிலம் நீர் நெருப்பு’ என்று தொடங்கும் திருவாசகத் தோணோக்கப் பாடல் எழுதப்பட்டு அதற்குரிய உருவங் களும் உள்ளன.
4. அடுத்த சபை, சத்சபை. இங்கு விசாலமான கல்மேடையில் தான் சுவாமிக்குக் கைபடாத அன்னம் நிவேதிக்கப்படுகிறது. இதனால் இதற்கு அமுத மண்டபம் என்று பெயர்.

5. சித்சபை அடுத்துள்ளது. பூஜை செய்வோர் நிற்குமிடம். ஐந்து (பஞ்ச) கலைகள் தீபங்களாகக் காட்சி நல்குமிடம். 6. ஆனந்த மயமான ஆத்மநாதரை நேரே காண்கிறோம். பரம சுவாமியான ஆத்மநாதர் எழுந்தருளியுள்ள கருவறையே  குருவருள் கொலு வீற்றிருக்குமிடே ஆனந்த சபை. ஆவுடையார் நம்மை ஆளுடையார். சதுரபீடம். மேலே சிவலிங்க பாணமில்லை. ஆத்மநாதசுவாமி அருவமாகக் காட்சியளிக்கிறார்.

அதற்குரிய இடத்தில் தங்கத்தாலான குவளை (ஆவுடையாரின் மேலே) சார்த்தி வைக்கப்பட்டுள்ளது. பின்னால் 27 நட்சத்திரங்களைக் கொண்டதான திருவாசி உள்ளது. அதன்மேலே மூன்று விளக்குகளை வைத் துள்ளனர். அவற்றுள் சிவப்பு அக்கியையும், வெண்மை சூரியனையும், பச்சை சந்திர னையும் குறிக்கின்ற தென்பர். சுவாமிக்கு முன்னால் இரு தூங்கா விளக்குகள் சுடர் விடுகின்றன.

மண்ணிலே பிறந்து இறந்து மண்ணாவதற்கு ஒருப்படுகின்ற நம்மை, அண்ணல் ஆட்கொண்டு அடியரிற் கூட்டிய ‘அதிசயத்தை’ அகலம் நெகிழ நினைத்து, கண்ணீர் பெருக்கி, கையாரத் தொழுது, வாய்குளிரப்பாடி, ‘சடையவனே! தளர்ந்தேன் எம்பிரான் என்னைத் தாங்கிக் கொள்ளே’ என்று பிரார்த்திக்கலாம்.
வெளியே வந்து பக்கத்தில் சென்றால் தியாகராஜ மண்டபத்தை அடையலாம். வழியில் வெயிலுகந்த விநாயகர் வீற்றிருக்கின்றார். பக்கத்தில் அக்னிதீர்த்தம் “இதற்கு திருத்தமாம் பொய்கை” என்று பெயர்.

தியாகராஜ மண்டபத்தில் மகாலிங்கமூர்த்தி தரிசனம் தருகிறார். எதிரில் முத்து விநாயகர் மண்டபத்தின் மேற்கூரையில் தொங்கும் கற்சங்கிலிகள் கண்களைக் கவர்கின்றன. கொடுங்கைகளின் அற்புதத்தை இம்மண்டபத்தில் காணலாம். எவ்வளவு கனமான கருங்கல்லை எந்த அளவுக்கு மெல்லியதாக இழைத்து, எத்தனை எத்தனை மடிப்புக்களாகக் கொண்டு வந்துள்ளார்கள் என்பதைக் கண்டு வியப்படைவதற்காக இடப்பக்கத்தின் கோடியில் இரண்டு மூன்றிடங்களில் துளையிட்டுக் காட்டியுள்ளார்கள்.

விழா நாள்களில் மாணிக்கவாசகர் இம்மண்டபத்திற்கு எழுந்தருளி இருந்து பின் புறப்பாடாகிறார். மண்டபத்தைக் கண்டு வியந்த நமக்கு அடுத்த தரிசனம் தலமரங்களான இருகுருந்த மரங்கள்தாம்.  இத்திருக்கோவில் பல்வகையிலும் சிறப்புகளை பெற்றுத்திகழ்கிறது. இங்கு தனியே தட்சிணாமூர்த்தி சந்நிதி இல்லை. கோவிலின் பக்கத்தில் உள்ள தெருக்கோடியில் ஆதினத்தின் கோவில் நிர்வாக அலுவலகம் உள்ளது.

பூதம் கட்டிய கோவில்

ஆவுடையார் கோவிலை பூதம்தான் கட்டியதாக இந்த பகுதி மக்களின் நம்பிக்கை. மிகப்பெரிய பாறை களைக் கொண்டு வந்து தூண்கள் அமைத்தும், சிலைகள் வடித் தும் கொடுங்கை கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியும் வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை மனிதர்களால் செய்ய முடியாது என்பதால் பூதம் கட்டியதாக அப்பகுதியினர் கூறுகிறார்கள்.

கோவிலின் முன்புறம் திருவாவடுதுறை ஆதீனப் பெயர்ப் பலகையுள்ளது. எதிரில் சற்று உள்ளடங்கி, குளமொன்று உள்ளது. பயன்படுத்தும் நிலையில் இல்லை. சாலையில் இருந்து கோவிலுள் நுழையும் முன்பு மண்டபத்தின் மேற்புறம் குருந்தமர உபதேசக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் சுற்றிலும் கடைகள், மண்டபத்தின் விதானம் மரத்தாலாகியது.

பார்வையைச் சற்று உயர்த்தினால் மேற்புறக் கொடுங்கையின் மேலே ஒரு குரங்கும் (கீழ்நோக்கியவாறு), ஒரு உடும்பும் (மேல் நோக்கியவாறு) செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அலைபாயும் குரங்கு மனத்தை அடக்கி, ஆத்மநாதரின் திருவடியில் உடும்புப்பிடிபோல நிறுத்தி அவருடைய திருவடிகளைச் சிக்கென பிடித்து, உய்வுபெற வேண்டுமென்னும் எண்ணத்துடன் உள்ளே செல்க என்று நமக்கு உணர்த்துவது போல இது உள்ளது.

அடுத்துள்ளது மண்டபம் பெரியது ரகுநாத பூபால மண்டபம். அற்புதமான வேலைப்பாடுடைய பெரிய மூர்த்தங்கள், அகோர வீரபத்திரரும் ரண வீரபத்திரரும் உட்புறமாகத் திரும்பியவாறு தரிசனம் தருகின்றனர். மத்தியில் மேற்புறத்தில் விராட் சொரூபம் வண்ணத்தில், பாலவனம் ஜமீன்தாரர்களின் முன்னோர்களான வேதவனப் பண்டாரம், ஆறு முகப் பண்டாரம் ஆகியோர்களால் இம்மண்டபம் 330 ஆண்டுகட்கு முன்பு கட்டப்பட்டதாம்.

இடப்பால் சிவானந்த மாணிக்கவாசகர் சன்னிதி. வலமாகச் சுற்றி வரும்போது துவாரபாலகர்களையும் விநாயகரையும் தரிசிக்கிறோம். சுவரில் வண்ண ஓவியங்கள் மிகப்பழமையானவை. அழிந்த நிலையில் உள்ளன. அவற்றுள் ஒன்று. ‘அண்டரண்ட பட்சியின் வண்ண ஓவியம். இப்பறவை இரண்டு யானைகளை ஒரு சேரத் தூக்குமளவுக்கு வலிமையுடைய பறவையாகத் திகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. பாம்பன் சுவாமிகள் பாடியுள்ள வீரபத்திரச் சக்கரத்தின் வண்ண ஓவியம் உள்ளது. அட்டாங்கயோக வளர்ச்சி சிற்பங்கள் மேற்புறத்தில் உள்ளன. தூணில் கண்ணப்பர், கண்களை அப்பும் கோலம் முதலியவைகளையும் காணலாம். மண்டபத்தின் ஓரங்களில் அமைந்துள்ள கொடுங்கைகளின் அழகைக் கண்டு ஆனந்தம் பெறலாம்.

அடுத்துள்ளது ராஜகோபுரம் முன்பு ஐந்து நிலைகளாக இருந்ததை மாற்றி ஏழுநிலைகளாக்கித் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இதற்கான மகாகும்பாபிஷேகம் 27.6.1990 அன்று நடைபெற்றது. நெடிதுயர்ந்த ராஜகோபுரம், தொலையில் வரும்போதே வா என்று அழைக்கும் வான்கருணைச் சான்றான ஆத்மநாத ஸ்வருபத்தின் ஸ்தூல அடையாளம்.

குதிரை சாமி

முதல் கால பூஜையில் சுத்த அன்னம் (வெறும் சாதம்), 2-ம் கால பூஜையின் போது, சர்க்கரைப் பொங்கல், 3-ம் கால பூஜையில் தேன்குழல் பாயசம், அதிரசம், பிட்டு, தோசை, 4-ம் கால பூஜையில் சுத்த அன்னம், வடை, கீரை, 5-ம் கால பூஜையின் போது, சுத்தம் அன்னம் மட்டுமே, 6-ம் கால அர்த்தசாம பூஜையின் போது, புழுங்கல் அரிசி சாதம் வடிக்காமல், புளியோதரை, பாகற்காய் என நெய்வேத்தியம். சூடு பறக்கும் உணவின் ஆவி சுவாமிக்கு பிரசாதமாகும். இந்த பிரசாதங்களை சாப்பிட, பித்ருக்கள் எனப்படும் முன்னோரின் சாபங்கள் நீங்கப் பெறுவதுடன், அவர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பஞ்சாட்சர மண்டபத்தின் கல்வெட்டுகளில் கலித்துறைப் பாக்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. அவற்றில், இந்த அற்புதமான மண்டப திருப்பணி, மனித முயற்சியால் கைகூடவில்லை. யோகநாயகி (ஆவுடையார் கோவில் இறைவி), கோபுரவேலவன் (பழைய கோபுரத்தில் இடம் பெற்றுள்ள முருகக்கடவுள்), விநாயகர், மாணிக்கவாசகர் ஆகியோரே செய்வித்தனர் என்ற வரிகள் உள்ளன.

பஞ்சாட்சர மண்டபத்தில் பொறிக்கப்பட்டு உள்ள, மற்றொரு பாடலில், விசைய (விஜய) ஆண்டு, துலா மாதத்தில், இந்த மண்டப திருப்பணியை துவங்கி, பிலவ ஆண்டு பங்குனி மாதத்தில், யோகநாயகி காரிகை இந்த பணியை முடித்தாள் என்று, கூறப்பட்டு உள்ளது. மேலும், சுவரோவியங்களை வரைந்து, பாக்கல் (பாவுகல்) எல்லாம் அமைத்தவன் விநாயகனே என்று, மற்றொரு பாடலில் கூறப்பட்டுள்ளது.

இங்கு ஒரு விசேஷம் என்னவென்றால் குருந்தமரத் தையும் சிவனாகக் கருதுவ தால், கார்த்திகை சோம வாரத்தில் இந்த மரத்தின் முன்பாகவே, 108 சங்காபி ஷேகம் நடக்கிறது

ஆறு கால பூஜையின் போதும், இவருக்கு 108 மூலி கைகள் கலந்த தைல அபிஷேகம் நடப்பது விசேஷம். பஞ்சாட்சர மண்டபத்தில் உள்ள சிவனை குதிரைச்சாமி என்று அழைக்கிறார்கள். மாணிக்கவாசகருக்காக, சிவன், குதிரைகளுடன் மது ரைக்கு சென்று அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் ஒப்படைத்தார். குதிரை மீது சென்ற சிவன், இக் கோவிலில் பஞ்சாட்சர மண்டபத்தில் இருக்கிறார். இவரை, குதிரைச்சாமி என்று அழைக்கிறார்கள்.

இத்தலத்தில் குருவாக இருந்து மாணவர்களுக்கு உபதேசம் செய்தபோது, சீடர்கள் அவருக்கு படைத்த உணவை ஏற்றுக்கொண்டார். அவரிடம் பயின்றவர்கள் வீட்டிலிருந்து புழுங்கல் அரிசி சாதம், கீரை, பாகற்காய் என எளிய பொருட்களை அவருக்கு கொடுத்தனர். அதனை சிவனும் விரும்பி வாங்கி சாப்பிட்டார்.

பூஜை கட்டண விபரம்

1.அர்ச்சனை ரூ.5
2.முடி காணிக்கை    ரூ.10
3.காது குத்து     ரூ.50
4.சகஸ்ரநாமம்     ரூ.10
5.அபிஷேகம்     ரூ.500
6.திருமணம்     ரூ.1,750

தல விருட்சம்

ஆவுடையார்கோவிலின் தல விருட்சமாக குருந்த மரங்கள் உள்ளன. கோவிலில் தியாகராஜ மண்டபத்துக்கு அருகே வடமேற்கு மூலையில் வெளி மதில் சுவரை ஒட்டியதுபோல் அமைந்துள்ள திருமாளி கைப்பத்தியில் தல விருட்சமான குருந்தை மரங்கள் இரண்டு உள்ளன. இந்த தல விருட்சங்களை பக்தர்கள் வலம் வந்து வழிபடுவதற்கு ஏற்றவாறு மேடையில் இடைவெளி அமைக்கப்பட்டுள்ளது.

விழாக்கள்

ஆவுடையார் கோவிவில் மூலவருக்கு மகுடாகமம் உத்தரபாகத் தின்படி பூஜைகள் நடை பெறுகின்றன. ஆனி மகத்திலும் மார்கழி திருவாதிரையில் 10 நாள்கள் பெருவிழா நடை பெறுகிறது.

இத்தலத்தில் நம்பியார்கள் எனப் படுபவர்களே முக்கிய பூஜகர்களாவார்கள். இவர்கள் ஆத்ம நாத சுவாமியை உள்ளிட்ட 301 பேர்களாவர்.
இத்திருக் கோவிலில் ஆறு வகைப்பட்ட பிரிவினர்களின் மூலமாக பூஜைகள் நடை பெறுகின்றன. அந்த விபரம் வருமாறு:

1.மூலவருக்கும், குருந்தமரத்தடியில் உள்ள மூல சுவாமிக்கும் நம்பியார்களும்
2.பரிவார தெய்வங்களுக்குச் சிவாசாரியார்களும்
3.குதிரைச்சாமிக்கு சைவப் பிள்ளைமார் களும்
4.வீரபத்திரருக்கு வேளாளர்களும்
5.கொத்தனார்களும்
6. மகாலிங்க மூர்த்திக்கு அஷ்ட சாஸ்திரக்காரர்கள் எனப்படுவோரும் பூஜைகள் செய்துவரும் ஏற்பாடு இங்குள்ளது.

நாள்தோறும் ஆறுகால பூஜைகள் ஆத்மநாதருக்கு ஆறுகாலங் களி லும் புழுங்கல் அரிசி நிவேதனம் ஒரு தவலையில் வடித்து கைபடாமல் அப்பாத்திரத்தோடு கொண்டு வந்து அமுத மண்டபத்தில் உள்ள கருங்கல் மேடையில் (சுவாமிக்கு எதிரில்) அப்படியே கொட்டி ஆவியோடு சுவாமிக்கு நிவேதிப்பதை நாமும் பார்த்து தரிசிக்கலாம்.

அர்த்த சாமத்தில் தினமும் புளியோதரை, எள் சாதம், பால் சாதம், உளுந்து சாதம், பாகற்காய், முளைக்கீரை நிவேதனம். திருவிழாக் காலங்களில் வழக்கமான நிவேத னங்களுடன் தேன் குழல், வடை, புட்டு, சீயம், அதிரசம், தோசை முதலியவை சிறப்பு நிவேதனமாகும்.

இந்த நிவேதன அமைப்பு ஆனி மகத்திலும், மார்கழி திருவாதிரையிலும் நடைபெறும் உற்சவ காலங்களில் மாணிக்க வாசகருக்கு உண்டு.
ஆத்மநாத சுவாமிக்கு வருடம் முழுவதும் உள்ள நைவேத்யம் மாணிக்கவாசகருக்கு இந்த இரு விழாக்காலங்களில் (10+10=20 நாட்களில்) படைக்கப்படுகிறது.

அக்கினி நட்சத்திர காலங்களில் சுவாமி க்கு இளநீரும், பானகமும், பாசிபருப்பும் தனித்த நிவேதனமாகும். (நிவேதனம் பற்றிய வரலாறு இக்குறிப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளது.)

கோவில் கல்வெட்டுகளில் இத்தலம் மிழலைக்கூற்றத்து நடுவிற்கூற்றம் பிரம தேசம் தனியூர் திருப்பெருந்துறையான பவுத்திர மாணிக்க சதுர்வேத மங்கலம் என்று குறிக்கப்பட்டுள்ளது. சுந்தரபாண்டிய மண்டபம், அம்பாள் மண்டபச்சுவர்கள், பஞ்சாட்சர மண்டபம் முதலிய இடங்களில் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன.

இவற்றில் இருந்து அக்காலத்தில் கோவிலுக்கும் சுவாமிக்கும் விடப்பட்ட நிவந்தங்கள் குத்தகைத்தாரர்களின் பத்திரங்கள், கும்பாபிஷேகம் நடைபெற்ற விவரங்கள், நிர்வாக செய்திகள் முதலியவை தெரிய வருகின்றன.

இத்திருக்கோவிலுக்குச் சற்று தொலைவில் ஆதிகயிலாய நாதர் கோவில் உள்ளது. தனிக்கோவில். மாணிக்கவாசகருக்கு முதல் உபதேசக்காட்சி அங்குதான். இக்கோவில் மாணிக்கவாசகருக்கு முன்பிருந்தே உள்ளது.

இப்பகுதிகள் அனைத்தும் ஒரு காலத்தில் காடாக இருந்ததாம். தற்போது ஆதிகயிலாய நாதர் கோவில் உள்ள இடத்தை, வடக்கூர் (வடக்களூர்) என்றும், ஆவுடையார் கோவில் உள்ள இடத்தை தெற்கூர் என்றும் சொல்கின்றனர்.

ஆதிகயிலாயநாதர் கோவில் கிழக்கு நோக்கியது. சிவகாமி அம்பாள் சந்நிதி தெற்கு, விநாயகர் கிழக்கிலும், பைரவர் தெற்கிலும், நந்தி மேற்கிலும் எழுந்த ருளியுள்ளனர். பராசரர், புலஸ்தியர், அகத்தியர் முதலிய மகரிஷிகள் இங்கிருந்ததாகச் சொல்கின்றனர்.

புழுங்கல் அரிசி நெய்வேத்தியம்

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பூஜைகள் நடைபெறும்போது பச்சை அரிசியிலேயே அமுது படைத்து நெய்வேத்தியம் செய்வார்கள். ஆனால் இந்த ஆவுடையார் கோவிலிலே 6 கால பூஜைக்குமே புழுங்கல் அரிசியால் தான் அமுது படைக்கப்படுகிறது. அதோடு பாகற்காய் கறியும், கீரையும் சேர்த்துப் படைக்கப்படுவது இங்கு மட்டும் தான். அதனை சிவபெருமானும் விரும்பி சாப்பிட்டார் என்பதன் அடிப்படையில் ஆத்மநாதருக்கு புழுங்கல் அரிசி சாதம்தான் நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. அடுப்பில் இருந்து இறக்கப்பட்ட சாதத்தை அப்படியே சுவாமி சன்னதிக்கு கொண்டு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள படைகல்லில் கொட்டி விடுகிறார்கள்.

அப்போது சன்னதி கதவுகள் சாத்தப்பட்டு சிறிதுநேரம் கழித்த பின்னரே திறக்கப்படுகிறது. சுவாமி அரூப வடிவிலானவர் என்பதால், அரூபமாகிவிடும் ஆவியுடன் நெய்வேத்தியம் படைக்கப்படுகிறது. மூன்றாம் கால (காலை 11 மணி) பூஜையின்போது மட்டும் தேன்குழல், அதிரசம், வடை, பிட்டு, தோசை, பாயாசம் படைக்கப்படுகிறது. தைப்பொங்கல் தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வாழை இலையில் 16 வகை காய்கறி களுடன், சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் மற்றும் கரும்பு படைக்கப்படுகிறது.

Similar News