ஸ்லோகங்கள்
மனக்கஷ்டம் வரும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

மனக்கஷ்டம் வரும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

Published On 2022-05-14 13:35 IST   |   Update On 2022-05-14 13:35:00 IST
மன கவலையோடு சோர்வோடு முகத்தில் சிரிப்பு இல்லாமல் இருக்கும் போது இந்த மந்திரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை முதலில் நினைத்துக் கொண்டு பின்பு கோரக்கர் சித்தரை மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

பூஜை அறையிலேயே ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து கொண்டு, முடிந்தால் உங்களுடைய கையில் இரண்டு துளசி இலைகளை வைத்துக் கொண்டு ‘ஓம் கோரட்ச சித்தாய நம’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மனதார கோரக்க சித்தரை நினைத்து இந்த மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் உங்களுடைய மனக்கவலை நீங்கும். துன்பங்கள் நீங்கும். துன்பம் வந்தாலும் உங்களுடைய முகம் சுருங்கி போகாது. அதை எதிர்கொண்டு எப்படி சமாளிக்க வேண்டும் என்ற தைரியம் கிடைத்துவிடும்.

Similar News