ஸ்லோகங்கள்
கருடாழ்வார்

ஜாதக தோஷங்களை தீர்க்கும் கருடாழ்வார் மந்திரம்

Published On 2022-02-10 13:18 IST   |   Update On 2022-02-10 13:18:00 IST
இந்த மந்திரத்தை தொடர்ந்து 48 நாட்கள் முறையாக உச்சரித்து, அதற்கான பலனை நீங்கள் பெற்று விட்டால், உங்களின் மனபயம் நீங்கும். விஷ ஜந்துக்களால் இருக்கும் ஜாதக தோஷங்கள் நீங்கும்.
பொதுவாகவே எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் விநாயகப் பெருமானை தான் தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். இதேபோல் பெருமாள் கோவில்களுக்கு நாம் செல்லும் போது, முதலில் கருடாழ்வாரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஒரு சாஸ்திரமும் உண்டு. இது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. முதலில் கருடாழ்வாரை தரிசனம் செய்துவிட்டு, அதன் பின்பு பெருமாளை தரிசனம் செய்வதுதான் சரியான முறையும் கூட. இனி பெருமாள் கோவில்களுக்கு சென்றால் இந்த முறையை பின்பற்றி கொள்ளுங்கள்.

ஓம் ஸ்ரீ காருண்யாய
கருடாய வேத ரூபாய
வினதா புத்ராய விஷ்ணு
பக்தி பிரியாய அமிர்த
கலச ஹஸ்தாய பஹு
பராக்ரமாய பக்ஷி ராஜாய
சர்வ வக்கிர சர்வ
தோஷ, விஷ சர்ப்ப
விநாசனாய ஸ்வாஹா

Similar News