ஆன்மிகம்
அதிர்ஷ்டம் தரும் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்

அதிர்ஷ்டம் தரும் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்

Published On 2019-08-09 07:08 GMT   |   Update On 2019-08-09 07:08 GMT
நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டு வித செல்வங்களுக்கு அதிபதியாக எட்டு தெய்வீக வடிவங்களில் வழிபடக்கூடிய அமைப்பு அஷ்டலட்சுமி என்றழைக்கப்படுகிறது.
நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டு வித செல்வங்களுக்கு அதிபதியாக எட்டு தெய்வீக வடிவங்களில் வழிபடக்கூடிய அமைப்பு அஷ்டலட்சுமி என்றழைக்கப்படுகிறது.

1.மஹாலக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும் (அனைத்து உயிர்களிலும்) ஸ்ரீலக்ஷ்மி உருவில் உள்ள ஸ்ரீமஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்

2.வித்யா லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு வித்யா (புத்தி) ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) புத்தியாக, ஞானமாக இருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். அந்த புத்தி உருவில் உறைபவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்

3.ஸந்தான லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) ,எல்லா உயிரினங்களிலும் தாய் உருவில் உள்ள ஸந்தான லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

4.காருண்யலக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு காருண்ய ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) , எல்லா உயிரிங்களிலும் தயையுருவில் உள்ள காருண்ய லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

5.சௌபாக்ய லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு துஷ்டி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) , எல்லா உயிரினங்களிலும் துஷ்டி (மகிழ்ச்சி) உருவில் உள்ள சௌபாக்ய லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

6.தனலக்ஷ்மி:
யாதேவி சர்வ பூதேஷு புஷ்டி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), புஷ்டி (நிறைவு / பலம் ) உருவத்தில் உள்ள தனலக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

7.வீரலக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு த்ருதி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), எல்லா உயிரினங்களிலும் தைர்ய உருவில் உள்ள வீரலக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

8.தான்யலக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு ஸூதா ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), எல்லா உயிரினங்களிலும் பசியை நீக்கும் தான்ய உருவில் உள்ள தான்ய லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்
Tags:    

Similar News