ஆன்மிகம்
ராமர்

ஏழு பிறவி பாவங்களையும் தீர்க்கும் ராமர் பாடல்

Published On 2019-07-04 04:50 GMT   |   Update On 2019-07-04 04:50 GMT
ஒருவர் ராம நாமத்தை கூறுவதன் பயனாக ஏழு பிறவிகளில் செய்த பாவங்க அனைத்தும் கரைந்து போகும் என்று கூறுகிறார் கம்பர்.
உலகில் உள்ள அனைத்து மந்திரங்களுக்கும் மூல மந்திரமாக திகழ்கிறது ராம நாமம். ஒருவர் ராம நாமத்தை கூறுவதன் பயனாக ஏழு பிறவிகளில் செய்த பாவங்க அனைத்தும் கரைந்து போகும் என்று கூறுகிறார் கம்பர். மேலும் ராம நாமத்தை கூறுவதால் என்ன பலன் என்று ஒரு பாடல் மூலம் பார்ப்போம்.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே.

பகவான் ஸ்ரீ ராமனை மனதில் நிலை நிறுத்தி “ஸ்ரீ ராமஜெயம்” அல்ல “ராம், ராம்” என்ற மந்திரத்தை தினமும் கூறுவதன் பயனாக செல்வம் சேரும், பாவம் கரைந்து போகும்,புகழ் கிடைக்கும், ஞானம் பெருகும், பிரபு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடலாம், வேண்டியவை அனைத்து கிடைக்கும் இப்படி பல நன்மைகளை பெறலாம்.
Tags:    

Similar News