ஆன்மிகம்

ஆனந்தம், தனவரவு அருளும் காமேஸ்வரி மந்திரம்

Published On 2018-07-17 08:05 GMT   |   Update On 2018-07-17 08:05 GMT
ஒவ்வொரு திதியையும் பரிபாலனம் செய்யும் மூல தேவிகளை நாம் மறவாமல் வழிபட்டால், வறுமை நீங்கும். அனைத்து துன்பங்களும் விலகும்.
‘காம’ என்றால், ‘விரும்பிய ரூபத்தை எடுக்கக் கூடியவள்’ என்று பொருள். இவள் கோடி சூரிய பிரகாசமானவள். மாணிக்க மகுடம் தரித்து, பொன்னாலான மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற அணி கலன்களை அணிந்திருப்பாள். முக்கண், ஆறு திருக்கரங்கள் கொண்டவள். தன் திருக்கரங்களில் கரும்பு வில், மலரம்புகள், பாசக்கயிறு, அங்குசம், அமிர்த பாத்திரம் மற்றும் வரத முத்திரையுடன் பிறை சூடிய திருமுடியைக் கொண்டவள்.

மந்திரம்:

ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லின்னாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச பிரதமை, அமாவாசை.

பலன்கள்: குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மன நிறைவான தாம்பத்திய வாழ்க்கை அமையும்.
Tags:    

Similar News