ஆன்மிகம்

வராகி அம்மனுக்கு உகந்த காயத்ரி மந்திரம்

Published On 2018-04-10 10:34 IST   |   Update On 2018-04-10 10:34:00 IST
வராகி அம்மனுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை ஜெபிப்பது சிறந்தது. இதனால் எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும்.
வராகி அம்மனுக்கு வீரநாரி, மகாசேனா, பஞ்சமீ என பல பெயர்கள் இருக்கிறது. துர்க்கையின் படை சேனாதிபதியாக இருந்து வெள்ளியை மட்டுமே ஈட்டியவள். ராஜ ராஜசோழன் போருக்கு செல்லும் முன்பு வராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்ததாக சில வரலாற்றுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த வராகி அன்னை உக்கிரமான தெய்வமாக பார்க்கப்பட்டாலும், கருணையில் தாய்க்கு நிகரானவள். இவளுக்குரிய காயத்ரி மந்திரத்தை கூறி அன்னையை வேண்டினால், கேட்டவரம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும்.

வராகி காயத்ரி மந்திரம்:

‘ஓம் ச்யாமளாயை விக்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்’

இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை ஜெபிப்பது சிறந்தது. இதனால் எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும்.

Similar News