ஆன்மிகம்

கல்வியில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய மந்திரம்

Published On 2018-03-02 06:24 GMT   |   Update On 2018-03-02 06:24 GMT
கல்விக்கு உரிய தெய்வங்களான தக்ஷிணாமூர்த்தி, ஹயக்ரீவர், சரஸ்வதிக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடுவதால் கல்வியில் முன்னேற்றம் காண இயலும்.
முக்கியமாக கல்விக்கு உரிய தெய்வங்களாக தக்ஷிணாமூர்த்தி, ஹயக்ரீவர், சரஸ்வதி ஆகியோரைக் குறிப்பிடுகிறார்கள். இவர்களுக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடுவதால் கல்வியில் முன்னேற்றம் காண இயலும்.

விசேஷமாக தக்ஷிணாமூர்த்தியை

“ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தியே
மஹ்யம் மேதாம்  
ப்ரக்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா”

என்ற மந்திரத்தால் வழிபடுவது மிகவும் நல்லது. இது ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ள துணை நிற்கும். 



ஹயக்ரீவரை

“உத்கீத ப்ரணவோத்கீத ஸர்வ
வாகீச்வரேஸ்வரா, ஸர்வ வேத மயா
சிந்த்யா ஸர்வம் போதய போதய”

என்ற மந்திரத்தைச் சொல்லி வணங்குவதால் மாணவர்களின் சிந்தனை ஒருமுகப்படுவதோடு பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளும் திறன் கூடும்.

“ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே
காமரூபிணீம் வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவதுமே ஸதா”

என்ற மந்திரத்தைச் சொல்லி வணங்குவதால் சரஸ்வதி தேவியின் அருள் என்றென்றும் துணை நிற்கும்.
Tags:    

Similar News