ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (23.5.2017 முதல் 29.5.2017 வரை)

Published On 2017-05-23 03:12 GMT   |   Update On 2017-05-23 03:12 GMT
23.5.2017 முதல் 29.5.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
23-ந்தேதி (செவ்வாய்) :

* பிரதோஷம்.
* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* சகல சிவன் கோவில்களிலும், மாலை நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.

24-ந்தேதி (புதன்) :

* மாத சிவராத்திரி.
* திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.

25-ந்தேதி (வியாழன்) :

* அமாவாசை.
* கார்த்திகை விரதம்.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் புறப்பாடு.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.

26-ந்தேதி (வெள்ளி) :

* சிவகாசி விஸ்வநாதர் கோவிலில் உற்சவம் ஆரம்பம், பூச்சப்பரத்தில் இறைவன் பவனி வருதல்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.



27-ந்தேதி (சனி) :


* சிவகாசி விஸ்வநாதர் பூத வாகனத்தில் திருவீதி உலா.
* குச்சனூர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.
* இன்று விஷ்ணு ஆலய வழிபாடு.
* இன்று கருட தரிசனம் நன்மை தரும்.
* சமநோக்கு நாள்.

28-ந்தேதி (ஞாயிறு) :

* ரமலான் நோன்பு ஆரம்பம்.
* அக்னி நட்சத்திரம் முடிவு.
* திருநெல்வேலி பிட்டாபுரத்தி அம்மன் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
* சிவகாசி விஸ்வநாதர் காமதேனு வாகனத்தில் வீதி உலா.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் உள்ள அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* இன்று சூரிய வழிபாடு சிறப்பு தரும்.
* மேல்நோக்கு நாள்.

29-ந்தேதி (திங்கள்) :

* முகூர்த்த நாள்.
* சதுர்த்தி விரதம்.
* ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம்.
* மதுரை, திருச்செந்தூர், திருப்பாப்புலியூர், திருஉத்திரகோசமங்கை, திருக்கழுக்குன்றம், திருவிடைமருதூர், காஞ்சி கோவில்களில் வைகாசி விசாக உற்சவம் ஆரம்பம்.
* சிவகாசி விஸ்வநாதர் பூச்சப் பரத்தில் பவனி, இரவு விருட்ச வாகனத்தில் வீதி உலா.
* சமநோக்கு நாள்.
Tags:    

Similar News