முக்கிய விரதங்கள்

கொரோனா பரவல் அதிகரிப்பு: மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்க்க அறிவுறுத்தல்

Published On 2022-07-01 06:15 GMT   |   Update On 2022-07-01 06:15 GMT
  • பள்ளிகளுக்கு முககவசம் அணிந்தபடி மாணவ-மாணவிகள் வந்தனர்.
  • உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பிறகே மாணவர்கள் வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டார்கள்.

சென்னை:

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தொற்றுக்கு ஆளானவர்கள் பலர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

கல்வி நிலையங்களில் மாணவர்கள் அதிக அளவில் இருப்பதால் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாகவும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் படியும் பொதுசுகாதாரத் துறை கல்வித்துறையை கேட்டுக் கொண்டது.

இதையடுத்து கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் முககவசம் அணிந்து வர வைப்பது, அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துவது, வெப்ப நிலையை பரிசோதிப்பது போன்ற கட்டுப்பாட்டு விதிமுறைகளை உடனே அமல்படுத்தும் படி கேட்டுக்கொண்டனர். மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி பள்ளிகளுக்கு முககவசம் அணிந்தபடி மாணவ-மாணவிகள் வந்தனர். முககவசம் அணிய மறந்து வந்தவர்களுக்கு சில பள்ளிகளே வழங்கியது.

உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பிறகே மாணவர்கள் வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டார்கள்.

Tags:    

Similar News