ஆன்மிகம்
சிவன் வழிபாடு

இன்று ஐப்பசி மாத பிரதோஷ விரதம்

Published On 2020-11-12 06:33 GMT   |   Update On 2020-11-12 06:33 GMT
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். அற்புதமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்யுங்கள்
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். அற்புதமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. ஐப்பசியை துலா மாதம் என்பார்கள். காவிரியில் துலா ஸ்தானக் கட்டம் என்றே உள்ளது. மயிலாடுதுறையில் காவிரிக்கரையில் துலா ஸ்தானக் கட்டம் என்றே அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில், காவிரியில் நீராடி, துவாதசியில் பெருமாளை தரிசிப்பது மகா புண்ணியம். தனம் தானியத்தைப் பெருக்கித் தரும் என்பது ஐதீகம்.

ஐப்பசி மாதத்தில் வரும் பிரதோஷம் இல்லத்தில் சுபிட்சத்தைத் தரும், கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இன்று பிரதோஷ நாளில் காலையில் இருந்து விரதம் இருந்து பிரதோஷ வேளையில், மாலையில், சிவன் கோவிலுக்குச் செல்லுங்கள். நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்ணார தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள். சிவ கடாக்ஷத்தைப் பெறுவீர்கள். இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும்.
Tags:    

Similar News