திருச்சியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 முதல் 150 இலங்கை தமிழ் பெண்கள் விரதமிருந்து 21 நாட்களும் கேதார கவுரி அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டு வருவது வழக்கம்.
அன்னை பராசக்தியான கவுரி இறைவனின் ஒரு பாகத்தை அடைய மேற்கொண்ட இந்த விரதம் 21 திதிகள் அடங்கிய 21 தினங்களில் கடைபிடிப்பது. இந்த விரதம் பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் நவமி அல்லது அஷ்டமி திதியில் தொடங்கும். திருச்சி கே.கே.நகர் அய்யப்பநகர் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் கேதாரேஸ்வரர் மற்றும் கேதார கவுரி அம்மன் சன்னதி உள்ளது.
இந்த சன்னதியில் முன்பாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 முதல் 150 இலங்கை தமிழ் பெண்கள் விரதமிருந்து 21 நாட்களும் கேதார கவுரி அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டு வருவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு இலங்கை தமிழ் பெண்கள் சுமார் 300 பேர் விரதம் இருந்து வருகிறார்கள். இந்த விரதத்தின் இறுதி நாளான தீபாவளி அன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு இந்த விரதமானது முடித்து வைக்கப்படுகிறது.