ஆன்மிகம்
எட்டுக்குடி முருகன் கோவில்

எதிரிகளால் ஏற்படும் துன்பத்தை தீர்க்கும் சத்ரு சம்ஹார திரிசதை பூஜை மற்றும் விரதம்

Published On 2020-10-22 11:07 IST   |   Update On 2020-10-22 11:07:00 IST
நமக்கு சொந்தமான இடத்தை அடுத்தவர் அபகரித்து கொள்ளுதல், நியாமில்லாத காரணங்களுக்காக எதிரிகளால் தொடர் தொல்லைகளை அனுபவித்தல், போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள், நாகபட்டினம் மாவட்டம், எட்டுக்குடி முருகன் கோவில் சென்று வழிபட வேண்டும்.
நமக்கு சொந்தமான இடத்தை அடுத்தவர் அபகரித்து கொள்ளுதல், நியாமில்லாத காரணங்களுக்காக எதிரிகளால் தொடர் தொல்லைகளை அனுபவித்தல், போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள், நாகபட்டினம் மாவட்டம், எட்டுக்குடி முருகன் கோவில் சென்று வழிபட வேண்டும்.

இங்கு சத்ரு சம்ஹார திரிசதை எனும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. எதிரிகளால் ஏற்படும் துன்பம் தீர இப்பூஜையை நடத்துவார்கள்.

எதிரிகளால் ஏற்படும் நியாயமான துன்பங்களுக்காக மட்டுமே இப்பூஜையை செய்ய வேண்டும். எதிரிகளை அழிக்கும் நோக்குடன் செய்யக்கூடாது. பிரச்சினை தீர வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே செய்ய வேண்டும்.

தேய்பிறை சஷ்டி அல்லது அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் இப்பூஜையை செய்வது சிறப்பு. இதற்கு முன்கூட்டியே கோயிலில் பதிவு செய்ய வேண்டும்.

முதல் நாள் இரவே இவ்வூருக்கு சென்று தங்கி அதிகாலை நீராடி அன்று முழுவதும் எட்டுக்குடி வேலவனுக்காக விரதம் இருந்து இப்பூஜையை செய்தால் சிறப்பான பலன்களை பெறலாம்.

பூஜை செய்த அன்று அந்த ஊரிலேயே தங்குவது சிறப்பு. இந்த பரிகார பூஜைக்கு மட்டுமல்ல எந்த ஒரு பரிகாரத்திற்க்கும் அந்த கோவில் இருக்கும் ஊரிலேயே அன்று தங்கி மறுநாள் இல்லம் திரும்பினால் பரிகாரத்திற்குரிய பலன் சீக்கிரம் கிடைக்கும். கோவில் இருக்கும் ஊரில் தங்கும் வசதி இல்லையென்றால் அதற்கு மிக அருகில் இருக்கும் நகரத்தில் தங்கி கொள்ளலாம்.

Similar News